தடுப்பூசி செலுத்தாத 800 ஊழியர்களை சஸ்பெண்ட் செய்த நிறுவனம்.!!

0
159

கொரனோ தடுப்பூசி செலுத்தாத 800 ஊழியர்களை ஏர் கனடா நிறுவனம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உலகம் முழுவதும் கொரனோ தொற்று பாதிப்பின் காரணமாக முடங்கியிருந்த நிலையில், தற்போது பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பல்வேறு நாடுகளில் விமான போக்குவரத்து மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

மேலும், விமானத்தில் பயணிக்கும் பயணிக்களுக்கு கொரோனா தடுப்பு ஊசியை கட்டாயம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பணிக்கு வரும் விமான ஊழியர்கள் தவறாது தடுப்பூசி செலுத்திருக்க வேண்டும் என அனைத்து விமான நிறுவனங்களும் அறிவித்துள்ளன.

அந்த வகையில், கனடா நாட்டில் ஏர் கனடா விமான நிறுவனத்தில் பணிபுரியும் விமான ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர். ஆனால், ஏர் கனடா விமான நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களில் 800-க்கும் மேற்பட்டோர் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை.

இந்த நிலையில், தடுப்பூசி போடாத 800-க்கும் மேற்பட்ட ஊழியர்களை ஏர் கனடா நிறுவனம் அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊழியர்கள் அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய பின்னரே பணியில் சேர்க்கப்படுவார்கள் என்றும் ஏர் கனடா நிறுவனம் அறிவித்துள்ளது.

Previous articleரூ.100 கோடி வசூல் செய்த டாக்டர்..நன்றி தெரிவித்த இயக்குனர் நெல்சன்.!!
Next articleஹூட் செயலியில் இணைந்த முதல்வர் ஸ்டாலின்.‌.வரவேற்ற சௌந்தர்யா ரஜினிகாந்த்.!!