தமிழக சட்டசபையில் கடந்த செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி நடைபெற்ற காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து உரையாற்றிய போது காவலர்கள் தங்களுடைய உடல் நலனை பாதுகாத்திட ஏதுவாகவும் தங்களுடைய குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது தற்காகவும் இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல் தலைமை காவலர்கள் வரையிலான காவலர்கள் எல்லோருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதத்தில் காவலர்கள் தங்களுடைய உடல் நலனைக் கருத்திற் கொள்ளும் விதத்திலும், தன்னுடைய குடும்பத்தினருடன் போதுமான நேரம் செலவிடுவதற்காகவும், இரண்டாம் நிலை காவலர் முதல் தலைமை காவலர்களும் வரையிலான காவல்துறையினர் எல்லோருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் நேற்றைய தினம் உத்தரவிட்டிருக்கிறார். அதற்காக அரசாணை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
காவல்துறையினரின் நலனைக் கருத்தில் கொண்டு முதலமைச்சர் வழி தீர்க்கப்படும் என்ற அறிவிப்பு காவல் பணியில் ஈடுபட்டுவரும் காவலர்களுக்கு அருமருந்தாக விளங்குவதுடன் புத்துணர்ச்சியோடும் உற்சாகத்துடனும் தங்களுடைய பணிகளை மேற்கொள்ள வழி வகுக்கும் என்று சொல்லப்படுகிறது.