தமிழகத்தில் இன்று கன மழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள்!

0
107

லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மற்றும் தென் தமிழகத்தை ஒட்டி நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக எதிர்வரும் 7ஆம் தேதி வரையில் தமிழ்நாட்டின் ஓரிரு பகுதிகளில் கனமழை ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

அந்த விதத்தில் இன்றைய தினம் டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சை ,நாகப்பட்டினம், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, நீலகிரி ,கோவை, உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன வரைக்கும் மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழையும் பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்பட்டுள்ளது.

நாளைய தினம் டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி ,சேலம், உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை வட மாவட்டங்களில் அனேக பகுதிகளில் மிதமான மழையும் தென் மாவட்டங்களில் அனேக பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது.

நாளை மறுநாள் அதாவது சனிக்கிழமை அன்று கோயம்புத்தூர் நீலகிரி சேலம் ஈரோடு கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழையும் தென் மாவட்டங்களில் அனேக பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.