சென்னையில் கனமழை! எச்சரிக்கை விடுத்த முதலமைச்சர்!

0
137

சென்னை எழிலகத்தில் அவசரகால கட்டுப்பாடு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வை மேற்கொண்ட அதனை அடுத்து அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார் .அப்போது அவர் தெரிவித்ததாவது,

 

எழும்பூர் ,கொளத்தூர், பெரம்பூர் ,புரசைவாக்கம் ,வில்லிவாக்கம்,போன்ற பகுதிகளில் மழை காரணமாக குடியிருப்பு  பகுதியில் இருக்கக்கூடிய தண்ணீரை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள பட்டு உள்ளது.

 

சென்னையில் மழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, அதற்கு தேவையான உதவிகளை செய்வதற்காக உத்தரவிட்டு இருக்கிறேன் .என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

 

வடசென்னை, தென் சென்னை ,இன்றைய தினம் மழை தொடர்பான சேதங்களை ஆய்வு செய்தேன் .மீட்பு பணிகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு, நிவாரண உதவிகளை வழங்குவதற்கான உத்தரவை பிறப்பித்தேன் என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர்.

 

பாதிக்கப்பட்டு இருக்கின்ற பொதுமக்களுக்கு சுமார் 50 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.இதனையடுத்து உணவு வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

 

மாநகராட்சி, வருவாய் துறை போன்ற அனைத்து துறை அதிகாரிகளும் ஒன்றாக சேர்ந்து மீட்பு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தெரிவித்துள்ளேன். மழையால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் அனைவருக்கும் நிவாரண உதவிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

 

சென்னை மாநகராட்சியில் உள்ள பணியாளர்கள் இரவு, பகல் இன்றி மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் 160 நிவாரண மையங்கள் தயார் நிலையில் இருக்கிறது.மோட்டார் பம்புகள் மூலம் சுமார் 500 பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.

 

ஒரே நாளில் மிகக் குறுகிய காலத்தில் மிக அதிக அளவு மழை பெய்திருக்கிறது; அதுவே அதிக அளவு நீர்தேக்கத்திற்கு காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரி 24மணி நேரமும் அரசால் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.சென்னையில் ஒரே தினத்தில் 20 சென்டிமீட்டர்க்கும் மிக அதிகமான மழை பெய்திருக்கிறது.

 

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ,சென்னை ,திருவள்ளூர்,மாவட்டங்களில் அடுத்த இரு தினங்களுக்கு பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.வெளியூரில் இருந்து சென்னை வருவதாக இருக்கும் பொது மக்கள் 2லிருந்து 3 நாட்கள் தவிர்ப்பது நல்லது.

இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

சென்னை எழிலகத்தில் அவசரகால கட்டுப்பாடு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வை மேற்கொண்ட அதனை அடுத்து அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார் அப்போது அவர் தெரிவித்ததாவது,

எழும்பூர் கொளத்தூர் பெரம்பூர் புரசைவாக்கம் வில்லிவாக்கம் போன்ற பகுதிகளில் மழையின் காரணமாக நீர் தேங்கி இருக்கிறது குடியிருப்புப் பகுதியில் இருக்கக்கூடிய தண்ணீரை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள பட்டு உள்ளது.

சென்னையில் மழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து அதற்கு தேவையான உதவிகளை செய்வதற்காக உத்தரவிட்டு இருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

வடசென்னை தென் சென்னை இன்றைய தினம் மழை தொடர்பான சேதங்களை ஆய்வு செய்தேன் அதேபோல மீட்பு பணிகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்கான உத்தரவை பிறப்பித்தேன் என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர்.

பாதிக்கப்பட்டு இருக்கின்ற பொதுமக்களுக்கு சுமார் 50 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன இதனையடுத்து உணவு வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

மாநகராட்சி வருவாய் துறை போன்ற அனைத்து துறை அதிகாரிகளும் ஒன்றாக சேர்ந்து மீட்பு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தெரிவித்துள்ளேன். மழையால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் அனைவருக்கும் நிவாரண உதவிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

சென்னை மாநகராட்சியில் உள்ள பணியாளர்கள் இரவு பகல் இன்றி மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் 160 நிவாரண மையங்கள் தயார் நிலையில் இருக்கிறது.மோட்டார் பம்புகள் மூலம் சுமார் 500 பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.

ஒரே நாளில் மிகக் குறுகிய காலத்தில் மிக அதிக அளவு மழை பெய்திருக்கிறது; அதுவே அதிக அளவு நீர்தேக்கத்திற்கு காரணமாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி இருபத்தி நான்கு மணி நேரமும் அரசால் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.சென்னையில் ஒரே தினத்தில் 20 சென்டிமீட்டர் இருக்கும் மிக அதிகமான மழை பெய்திருக்கிறது.

செங்கல்பட்டு காஞ்சிபுரம் சென்னை திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த இரு தினங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.வெளியூரில் இருந்து சென்னை வருவதாக இருக்கும் பொது மக்கள் 2லிருந்து 3 நாட்கள் தவிர்ப்பது நல்லது.
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

Previous articleகோரிக்கை வைத்த சென்னைவாசிகள்! அரசு அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு போட்ட முதலமைச்சர்!
Next articleஅவதி படும் மக்கள்! அகற்றப்படுமா மழை நீர் ?