அவதி படும் மக்கள்! அகற்றப்படுமா மழை நீர் ?

0
93
suffering-people-will-rainwater-be-removed
suffering-people-will-rainwater-be-removed

சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடங்கிய மழை முப்பொழுதும் தொடர்ந்து நிக்காமல் பெய்து வருகிறது. இதனால் சென்னையில் உள்ளபல பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி காட்டாறு போல காட்சியளிக்கிறது.

மேலும்,அங்கு உள்ள ரயில்சென்னையில் பெய்து வரும் பலத்த கன மழை காரணமாக 166 தெருக்களில் வெள்ளப்பெருக்கு நீர் சூழ்ந்துள்ளது என்றும் அவற்றை நீக்கும் பணி தொடர்ந்து தீவிரமாக நடந்து வருகிறது நிலையங்கள்,மற்றும் பேருந்து நிலையங்கள் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களிலும் மழைநீர் சூழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு மற்றும் மக்கள் நடமாற்றத்திலும் தடை ஏற்பட்டது.மிகவும் தாழ்வான பகுதியில் இருக்கும் குடியிருப்புகளிலும் மழைநீர் அதிகமாக சூழ்ந்து காணப்பட்டன.இதனால் அம்மக்களின் இயற்கை சூழ்நிலை பாதிக்கப்பட்டது.

மேலும்,அங்குள்ள வீடுகளிலும் மழைநீர் சென்றதால் பொதுமக்கள் என்ன செய்வதென்று அறியாமல் தவித்து வருகின்றனர் .மேலும், இதில் குழந்தைளைகளை வைத்து கொண்டு பெரும் சிரமத்தில் தவித்து கொண்டிருக்கின்றனர்.

இதையடுத்து அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அரசு உதவும் வகையில் 500க்கும் மேற்ப்பட்ட மோட்டார்கள் மூலம் தெருக்கள் மற்றும் சுரங்கப்பாதைகளில் தேங்கி இருக்கும் தண்ணீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மிகவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 166 தெருக்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது. அவற்றை விரைவில் அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்