சகோதர சகோதரிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்! – முன்னாள் காங்கிரஸ் தலைவர்!
தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ளது. அதன் காரணமாக மழை நீர் செல்ல வழி இல்லாமல் அனைத்து மாநில மக்களும், தண்ணீரோடு போராடி வருகிறார்கள்.
இதே போல் கடவுளின் தேசம் என்று சொல்லப்படும் கேரளாவிலும் தற்போது பெருத்த கனமழை பொழிந்து வருகிறது. அங்கு எப்போதும் மழை பொழியும் என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்நிலையில் கடந்த கொரோனா காலத்தில் கூட அங்கு கொரோனா ஒரு புறம் மற்றும் மழை வெள்ளம் ஒரு புறம் என மக்களை படுத்தி எடுத்து வந்ததும் குறிப்பிடத் தக்கது.
இந்நிலையில் தற்போதும் கேரளாவில் கனமழை பொழிந்து வருவதன் காரணமாக திருவனந்தபுரம், இடுக்கி, எர்ணாகுளம் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் அனைத்து ஆறுகளும் அபாயகரமான நிலையை தாண்டி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. பல தாழ்வான பகுதிகளில் அதுவும் மக்கள் வசிக்கும் இடங்களான பல பகுதிகளிலும் வெள்ளம் சூழும் என்ற நிலை உள்ளதால், பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம் போன்ற மாவட்டங்களில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் கேரளாவில் கனமழை பெய்து வருவதால் சகோதர, சகோதரிகள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் தளத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கேரளாவில் உள்ள நமது சகோதர, சகோதரிகள் கனமழையில் தவித்து வருகின்றனர். காங்கிரஸ் தொண்டர்கள் எல்லா வகையிலும் அவர்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். கேரள சகோதர, சகோதரிகள் கவனமாக இருங்கள் மற்றும் அனைத்து பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் பின்பற்றுங்கள் என்றும் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/RahulGandhi?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1460086651150077955%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dailythanthi.com%2FNews%2FIndia%2F2021%2F11%2F15105204%2FBrothers-and-sisters-be-careful-as-it-is-raining-heavily.vpf