டெல்டா மாவட்டத்தையே கவனிக்கும் தமிழக அரசின் பார்வை எங்கள் மீது திரும்புமா? ஏக்கத்துடன் காத்திருக்கும் அமைச்சர் தொகுதி விவசாயிகள்!

0
130

தமிழகம் முழுவதும் தீவிரமாக பெய்து வரும் பருவ மழையின் காரணமாக, நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல கிராமங்கள் நீரில் மிதந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக சொல்லவேண்டும் என்று சொன்னால், தலைநகராக இருக்கக்கூடிய சென்னை கடந்த 2015ஆம் ஆண்டு எதிர்கொண்ட அதே நிலையை மறுபடியும் எதிர் கொண்டிருக்கிறது.

அந்த பகுதியில் இருக்கக்கூடிய குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய வீராணம் மற்றும் செம்பரம்பாக்கம், மதுராந்தகம், உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி வருகின்றன. அதே போல டெல்டா மாவட்டத்தில் ஒன்றான சேலம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய மேட்டூர் ஆனால் தன்னுடைய முழு கொள்ளளவை எட்டி இருக்கிறது. அதே போன்று முல்லைப் பெரியாறு அணை தன்னுடைய முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

இதை தவிர்த்து தமிழகத்தில் ஆங்காங்கே இருக்கக் கூடிய நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இதனால் பல கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், தமிழகம் முழுவதும் இந்த மழை வெள்ளம் காரணமாக, விவசாயம் படு மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது ஆகவே விவசாயிகள் மிகப்பெரிய கவலையில் இருந்து வருகிறார்கள்.

பல பகுதிகளில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகிய நிலையில், இருக்கிறது. அதோடு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் நீர் தேங்கி இருப்பதால் அந்த நீரில் நனைந்த நெல் மூட்டைகள் முளைவிடத் தொடங்கியிருக்கிறது இதனை சரி செய்ய வேண்டும் என்று அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு விவசாயிகள் வெகுவாக நஷ்டம் அடைந்து இருக்கிறார்கள். ஆனால் தமிழக அரசோ டெல்டா மாவட்டங்களை மட்டும் முன்னுரிமை கொடுத்து நேரில் சென்று பார்வையிட்டு விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்குவதற்கு முடிவு செய்திருக்கிறது. இதனால் மற்ற மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்து இருக்கிறார்கள்.

குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகாவை சார்ந்த வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ரெட்டி குடிக்காடு, வசிஸ்டபுரம், மே.க. நல்லூர், ப.க.நல்லூர், கீழ பெரம்பலூர், வயலூர், வயலப்பாடி, உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த தொகுதிகளில் பருத்தி மகசூல் அதிகமாக இருப்பதால் இந்த பகுதி விவசாயிகள் அதிகமாக பருத்தியை விவசாயம் செய்து இருந்தார்கள் இந்தநிலையில், தற்சமயம் பெய்து வரும் தீவிர மழையின் காரணமாக, இந்த பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி கள் நீரில் மூழ்கி நாசமாகின.

இதனால் இந்த பகுதி விவசாயிகள் வெகுவாக கவலை அடைந்து இருக்கிறார்கள்.

இருந்தாலும் இந்த பகுதியை தமிழக அரசு பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை என்பதை இந்த பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் ஆதங்கமாக இருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் குன்னம் சட்டசபை தொகுதி சட்டசபை உறுப்பினர் எஸ் எஸ் சிவசங்கர் தற்சமயம் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்து வருகிறார், அப்படி இருக்கும்போது ஒரு அமைச்சரின் தொகுதிக்கு இந்த நிலையா? என்று பொதுமக்கள் தங்களுடைய ஆதங்கங்களை கொட்டி தீர்த்து வருகிறார்கள்.

அதோடு சமீபத்தில் இந்த பகுதிக்கு பேருந்து வரவில்லை என்று வசிஸ்டபுரம் ஊராட்சி மன்ற நிர்வாகம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அந்த பேருந்தை மறுபடியும் இயங்க வைத்தவர் அமைச்சர் சிவசங்கர். இந்த நிலையில், விவசாயிகள் தங்கள் பக்கம் அமைச்சரின் பார்வை திரும்புமா? தங்களுடைய கவலை நீங்க அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா? என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், சமீபத்தில் மழை வெள்ள சேதங்களை பார்வையிடுவதற்காக தமிழகம் வந்த மத்திய குழுவைச் சார்ந்தவர்கள் டெல்டா மாவட்டங்களான கன்னியாகுமரி, சேலம், ஆத்தூர், நாகப்பட்டினம், திருவாரூர், மாவட்டங்களையும் சென்னைக்கு அருகாமையில் இருக்கக்கூடிய திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, போன்ற மாவட்டங்களில் மட்டும் தங்களுடைய ஆய்வுகளை முடித்துக் கொண்டு சென்று விட்டது.

ஆனால் இதனை கவனித்த இந்த பகுதி விவசாயிகள் விவசாயிகள் ஆகிய நாங்கள் தமிழகம் முழுவதும் இருக்கின்றோம், ஆனால் தமிழக அரசும், மத்திய குழுவினரும், டெல்டா பகுதிகளில் மட்டும் பார்வையிட்டு சென்றுவிட்டார்கள். அப்படியானால் எங்களுக்கு நிவாரணம் கிடைக்காதா எங்கள் பக்கம் அரசின் பார்வை திரும்பாதா? என்று ஏக்கத்துடன் கேள்வி எழுப்புகிறார்கள்.

சென்னைக்கு அருகில் இருக்கக்கூடிய மாவட்டங்களிலும் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மட்டும் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ், உள்ளிட்டோர் நேரடியாக சென்று வெள்ள சேத பாதிப்புகளை பார்வையிட்டு, அங்கு இருக்கக்கூடிய விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து இருக்கிறார்கள். அதோடு முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு விவசாயிகளிடம் நேரடியாக சென்று ஆலோசனை செய்து அங்கே இருக்கக்கூடிய களநிலவரம் தொடர்பாக கேட்டறிந்து இருக்கிறார்.

ஆனால் ஒரு அமைச்சரின் தொகுதியாக இருந்தும் குன்னம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மேற்கண்ட கிராமங்களின் விவசாயிகள் இந்த மழை, வெள்ளம் காரணமாக, வெகுவாக பாதிப்படைந்து இருக்கிறார்கள். ஆனால் ஒரு அமைச்சரின் தொகுதியாக இருந்தும்கூட அரசின் பார்வை எங்கள் மீது திரும்பவில்லையே என்று இந்த பகுதி விவசாயிகள் வெகுவாக கவலையில் இருக்கிறார்கள்.

இந்தப் பகுதியில் நெல் பயிரிடப்பட்டு இருந்தாலும், இங்கே பருத்தி மகசூல் அதிகமாக இருக்கிறது. நெல் பயிரிடப்பட்டு இருந்தாலும் விவசாயிகளுக்கு இந்த பகுதியில் அதிகமாக லாபம் கிடைப்பதில்லை என்பதால் இந்த பகுதி விவசாயிகள் பருத்தி மகசூல் அதிகமாக செய்து வருகிறார்கள். ஆனால் தற்போது பெய்த மழையின் காரணமாக, அவர்களின் கனவு வீணாகிப் போனது.

வெறும் ஏரி மற்றும் குளங்களில் இருந்து வெளியேறும் நீரின் காரணமாக, பாதிப்படையும் விவசாயிகளை கண்காணித்து அவர்களுக்கு நிவாரண உதவியை வழங்குவதற்கு தமிழக அரசு துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

ஆனால் இந்தப் பகுதியில் வெள்ளாறு மற்றும் சின்னாறு என்ற இரண்டு நதிகள் அருகருகே இருப்பதால் இந்த பகுதி விவசாயிகள் சிறிய அளவில் மழை பெய்தாலும், பெரிய அளவிலான பாதிப்பை சந்திக்கிறார்கள், ஆனாலும் இந்த பகுதி மக்கள் மீது தமிழக அரசின் பார்வை இதுவரையில் திரும்பியதில்லை.

ஆனால் தற்சமயம் இந்த குன்னம் சட்டசபை தொகுதி அமைச்சர் தொகுதி என்ற காரணத்தால், அரசு இந்த தொகுதியை தனி கவனத்துடன் கவனிக்கும் என்று இந்த பகுதி மக்கள் நினைத்திருந்தார்கள். ஆனாலும்கூட தற்போது இந்த இரு நதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தாலும் தமிழக அரசின் பார்வை இந்த பகுதி மக்கள் மீது படாதது இந்த பகுதி மக்களை மேலும் வருத்தத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.

இந்தப் பகுதியில் இருக்கக்கூடிய இரு நதிகளிலும் சற்றேறக்குறைய ஒரு மாத காலமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன்காரணமாக, விவசாயிகளும் ஊர் பொதுமக்களும் எந்நேரமும் பாதிப்பு ஏற்படலாம் என்று அச்சத்துடனே வாழ்ந்து வருகிறார்கள். அதோடு குன்னம் சட்டசபை உறுப்பினரும், தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான எஸ், எஸ், சிவசங்கர் மற்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கும், இந்த பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வைக்கும் முக்கிய கோரிக்கை என்னவென்றால்? தற்சமயம் மீண்டும் மழை வேகமெடுத்து இருப்பதால் மத்தியகுழு மறுபடியும் தமிழகத்திற்கு வந்து தற்போது ஏற்பட்டிருக்கக் கூடிய மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழக அரசின் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது.

தமிழக அரசின் இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு மீண்டும் மத்திய குழுவை தமிழகத்திற்கு அனுப்பினால் பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட குன்னம் சட்டசபை தொகுதிக்கு உள்ளான அருகாமையில் இருக்கும் வசிஸ்டபுரம், மே.கா. நல்லூர், ப.க.நல்லூர், கீழ பெரம்பலூர், உள்ளிட்ட பகுதிகளுக்கு மாற்றிய குழுவினரை அனுப்பி இங்கே ஏற்பட்டிருக்கக் கூடிய விவசாய பாதிப்புகளை பார்வையிட்டு அதற்கு ஏற்றவாறு மத்திய அரசிடம் நிவாரண நிதியை வாங்கி கொடுக்க வேண்டும் என்பதுதான். ஆனால் தமிழக அரசு இந்த பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதற்கு இந்த கோரிக்கையை இந்த பகுதி மக்கள் இந்த பகுதி சட்டசபை உறுப்பினரும், தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான எஸ். எஸ். சிவசங்கர் அவர்களுக்கு முதலில் வைத்திருக்கிறார்கள்.

ஆகவே அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மனம் வைத்தால் இந்த பகுதி விவசாயிகள் நலம் பெறுவார்கள் என்பது பொதுவாவர்களின் கருத்தாக இருக்கிறது.

அதேநேரம் மேலே குறிப்பிடப்பட்ட மே.கா நல்லூர் மற்றும் ப.க.நல்லூர் உள்ளிட்ட கிராமங்கள் பெரம்பலூர் மாவட்டத்திற்கு கடைசி கிராமங்களாக இருப்பதால் தமிழக அரசும் இந்த தொகுதி சட்டசபை உறுப்பினரும், தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான சிவசங்கர் மற்றும் மாவட்ட நிர்வாகம் உள்ளிட்டோர் ஒன்றிணைந்து உடனடியாக இந்த பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.

Previous articleநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர்! முதல் நாளிலேயே அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!
Next articleஅந்தமான் கடல் பகுதியில் இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!