இந்த மாணவர்களுக்கு அரசின் ரூ.75 ஆயிரம் நிதியுதவி! எப்படி விண்ணப்பிப்பது!
சமீப காலமாக தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை மாணவர்களுக்காக செய்து வருகிறது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அவர்கள் கூறியது, பள்ளியில் பயிலும் மாணவர்கள் பெற்றோரை இழந்து இருந்தால் அவர்களுக்கு ரூ .75 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்த நிதியுதவியும் மூலம் அவர்கள் தங்கள் பராமரிப்பு செலவுகள் மற்றும் தங்கள் படிப்பு சார்ந்த செலவுகளுக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர்.
இப்பொழுது தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி தற்பொழுதுள்ள அரசு பள்ளிகள் அனைத்தும் ,முன்பை விட தரம் உயர்த்தப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி குறிப்பாக அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அரசு வேலைகளில் கூடுதல் இட ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்க ஒன்று. அதுமட்டுமின்றி அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கும் உயர் கல்லூரிகளில் சேரும் பொழுது அவர்களுக்கு கூடுதல் சலுகைகளும் தற்போது வழங்கி வருகின்றனர்.
மேலும் தற்பொழுது உள்ள அரசு பள்ளிகளில் ஹைடெக் லேப், நவீன ஆய்வு கூடங்கள், மைதானங்கள் என தனியார் பள்ளியை போலவே அரசுப் பள்ளி செயல்பட்டு வருகிறது. போல மாணவர்களுக்கு எளிய முறையில் பாடங்களை கற்பிக்க சிறப்புமிக்க ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி விலையில்லா நோட்டு புத்தகங்கள் பள்ளி எடுத்து செல்லும் வகையில் இலவச பையன்கள் மடிக்கணினிகள், காலணிகள் ,சீருடைகள் ,இலவச பேருந்து பயண அட்டை சைக்கிள் போன்றவை வழங்கி வருகின்றனர்.
இதன்மூலம் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் பெருமளவு பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள இந்த ரூ 25 ஆயிரம் நிதி உதவியும் தாய் தந்தையை இழந்த மாணவர்களுக்கு பேருதவியாக காணப்படும். இந்த நிதி உதவியை பெற விரும்பும் மாணவர்கள் அவரவர் பள்ளியிலேயே விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளனர்.