கொஞ்சம் கூட மாறாத பெட்ரோல் மற்றும் டீசல் விலை!

0
155

சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றனர். இதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியிருக்கிறது.

இதற்கிடையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு சற்று குறைத்தது, இருந்தாலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அவ்வப்போது அதிகரித்த வண்ணமே இருக்கிறது. ஆனால் கடந்த 30 நாட்களாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 101 ரூபாய் 40 காசுகளுக்கும், டீசல் விலை 91ரூபாய் 43 காசுகளுக்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில், 31 ஆவது நாளாக சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் அதே நிலையில் நீடித்து வருகிறது.

Previous articleபாகிஸ்தானில் நடைபெற்ற பயங்கரம்! ஒரு மனிதனை உயிரோடு எரித்து கொலை! இதுதான் காரணம்!
Next articleஅரசுக்கு கோடி கணக்கில் வருவாய் இழப்பு! டாஸ்மாக் நேர மாற்றத்திற்கு சொன்ன முக்கிய காரணங்கள்!