அரசுக்கு கோடி கணக்கில் வருவாய் இழப்பு! டாஸ்மாக் நேர மாற்றத்திற்கு சொன்ன முக்கிய காரணங்கள்!

0
72
Government loses crores of revenue! The main reasons given by Tasmag for the time change!
Government loses crores of revenue! The main reasons given by Tasmag for the time change!

அரசுக்கு கோடி கணக்கில் வருவாய் இழப்பு! டாஸ்மாக் நேர மாற்றத்திற்கு சொன்ன முக்கிய காரணங்கள்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஆரம்ப காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கான பல  கட்டுப்பாடுகளை அரசு சொல்லியிருந்தது. அதன்படி சில மாதங்கள் டாஸ்மாக் கடைகள் இல்லாத நிலை கூட இருந்தது. அதனால் மது பிரியர்கள் மாநிலம் விட்டு மாநிலம் என்று பயணித்து மது அருந்தும் நிலைமைக்கு தள்ளப்பட்டனர்.

அதன் பிறகு கொரோனாவின் தாக்கம் குறைந்ததை அடுத்து மிகுந்த எச்சரிக்கை விதிமுறைகளை பின்பற்றி கடைகள் திறக்கப்பட்டது. ஏனெனில் கூட்டம் அதிகரிக்கும் இடங்களில் எல்லாம் நாம் கூட்டத்தை அதாவது பொதுமக்களை கட்டுப்படுத்த முடியாது என்ற காரணமும் அதில் ஒன்று. அதன் காரணமாக தொற்று அதிகரித்துவிடும் என்று காரணமும் இருந்தது.

கடந்த ஆண்டு டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணிக்கு தொடங்கி இரவு 10 மணிவரை செயல்பட்டு வந்தன. இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த கடைகள் அனைத்திலும் வழக்கம் போல காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் திடீரென்று அந்த கடைகள் இயங்கும் நேரம் மாற்றப்படுவது குறித்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் திடீர் அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் தமிழகத்தில் இயங்கும்  கடைகள் அனைத்தும் மீண்டும் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே செயல்பட்டு கொண்டு இருந்த கால நேரங்களில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இரவு 10 மணி வரை செயல்படும் போது விற்பனை கணக்கு முடிக்க 11 மணிக்கு மேலாகி விடும் என்றும், இதனால் விற்பனை பணத்தை எவர் வேண்டுமானாலும் சுலபமாக கொள்ளையடிக்கும் சம்பவங்கள் பல அதிகரித்து விடும் என்றும், இதனால் ஊழியர்கள் தாக்கப்படுவது மாதிரியான செயல்கள் அதிகரிக்கும் என்றும் சொல்லியுள்ளனர்.

இதை தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநில தலைவர் பெரியசாமி, சிஐடியு சம்மேளன பொதுச் செயலாளர் கே.திருச்செல்வன் ஆகியோர் அரசுக்கு வலியுறுத்தி உள்ளனர். இதற்கு அரசு தரப்பில் இருந்து தற்போது புதிய காரணமொன்றை வெயிட்டு உள்ளது. எப்போதும் போல வழக்கமான நேரத்தில் அதாவது இரவு 8 மணி முதல் பத்து மணி வரையிலான நேரத்திற்கு தான் இந்த கடைகளில் விற்பனை கல்லா கட்டும் என்றும், தற்போது எட்டு மணிக்கே கடைகள் மூடப்படுவதாலும், பல கடைகளை அரசு குறைந்துள்ளதும் குறிப்பிடத் தக்கது.

அதன் படி செப்டம்பர் மாத கணக்கின்படி அரசுக்கு சுமார் 7000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கருத்தில் கொண்டு தான் பழையபடி இரவு 10 மணி வரை கடைகளை இயக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது என சிறப்பு தகவலும் வெளியாகியுள்ளது. அப்போ நாம் உழைக்கும் உழைப்பை எல்லாம் அரசுக்கு வருமானமாக தந்து கொண்டு உள்ளோம் என்று குடிமகன்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

நமது வீட்டில் எது இருந்தாலும், இல்லாமல் போனாலும் சிலருக்கு கண்டிப்பாக குடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஊன்று கோலாக இருக்கும் இந்த நேரத்தில் இதையும் அவர்கள் மூலையில் ஏற்றி நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.