ஓமைக்ரான் யாரையும் விடாது! குடும்பத்தை கொலை செய்த சைக்கோ பேராசிரியர்!

Photo of author

By Hasini

ஓமைக்ரான் யாரையும் விடாது! குடும்பத்தை கொலை செய்த சைக்கோ பேராசிரியர்!

தென் ஆப்பிரிக்காவில் தற்போது புதிதாக கண்டறியப்பட்ட ஓமைக்ரான். கொரோனாவிலிருந்து பல்வேறு பிறள்வு மாறுபாடு கொண்ட வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் தான் முதன்முதலில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இது மிக குறைந்த காலத்திலேயே இந்தியா உட்பட பல நாடுகளிலும் பரவி விட்டது. இன்று வரை இந்தியாவிற்குள் மூன்று பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கர்நாடகாவில் இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் ஒருவர் மற்றும் குஜராத்தில் ஒருவர் என அடையாளம் காணப்பட்டு உள்ளது. மேலும் புதிய வகை கோரோனாவை கட்டுப்படுத்த விமான நிலையங்களில் மிகுந்த எச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்படுகின்றன. மேலும் பொது இடங்களில் பல அதிகாரிகளும் புதிய கட்டுப்பாடுகள் பலவற்றையும் விதித்துள்ளனர்.

இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஊரில் கல்யாண் பூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் தடயவியல் பேராசிரியராக பணிபுரிந்து வந்தவர் 55 வயதான சுஷில் சிங். இவரது மனைவி சந்திரபிரபா 50, மகன் ஷிகார் சிங் 21, குஷி சிங் 16. மனைவி மற்றும்  குழந்தைகளுடன் இவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சுசில் சிங் தனது மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

ஆனால் கொலை செய்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன் இந்த விஷயங்கள்  குறித்து தனது சகோதரருக்கு அந்த பேராசிரியர் வாட்ஸ் அப்பில் ஒரு குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளார். அதில் அவர் ஓமைக்ரானில் இருந்து யாரும், யாரையும் காப்பாற்றப் போவதில்லை என்றும், எனவே நான் அனைவரையும் விடுவிக்கிறேன் என்றும், தெரிவித்திருந்தார்.

அந்த செய்தியை பார்த்து அந்த சகோதரர் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். அதன் காரணமாக சகோதரரின் வீட்டிற்கு அவர் உடனடியாக சென்றார். ஆனால் வீடு பூட்டி இருந்தது. எனவே அந்த பூட்டை உடைத்து திறந்து உள்ளே பார்த்தபோது தனது சகோதரரின் மனைவி மற்றும் குழந்தைகள் சடலமாக கிடந்துள்ளார்கள். எனவே இது குறித்த தகவல் போலீசாருக்கு அவர் தெரிவித்தார்.

மேலும் போலீசார் அந்தப் பேராசிரியரின் டைரியையும் கைப்பற்றி உள்ளனர். அதில் தனது குடும்பத்தினரை கொலை செய்தது குறித்தும், ஓமைக்ரான் மாறுபாட்டை பற்றியும் அவர் விரிவாக எழுதியுள்ளார். மேலும் இறந்த உடல்களை எண்ணுவது இப்போது முக்கியம் அல்ல என்றும், ஓமைக்ரான் உலக மக்கள் அனைவரையும் கண்டிப்பாக கொள்ளும் என்றும் அவர் எழுதி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்தப் பேராசிரியரின் கைபேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளதாகவும், அவரை மிக தீவிரமாக அனைத்து இடங்களிலும் தேடி வருவதாகவும், போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. வைரசிடம் இருந்து  விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது தான். அதற்காக சொந்த குடும்பத்தையே கொலை செய்யும் அளவிற்கு என்ன ஒரு உலகமோ? தெரியவில்லை.