7-12-2021- இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

0
221

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு எரிபொருள் விலையை தினம்தோறும் நிர்ணயித்துக் கொள்ளலாம் என்ற நடைமுறைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதன்படி எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் தங்களுடைய நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.

இதற்கிடையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது, ஆனாலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அவ்வப்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால் கடந்த 30 நாட்களுக்கு மேலாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 101 ரூபாய் 40 காசுகளுக்கும், டீசலின் விலை 91 ரூபாய் 43 காசுகளுக்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 33வது நாளாக சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் அதே நிலையில் நீடித்து வருகின்றது. அதன்படி இன்றைய தினம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 101 ரூபாய் 40 காசுக்கும், டீசலின் விலை 91 ரூபாய் 43 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Previous articleமேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவு அதிகரிப்பு!
Next articleமுல்லைப் பெரியாறு அணையில் நீர்திறப்பு குறைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here