அனைத்தும் நவீன மயமாகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் எல்லோருமே ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றோம். இந்த சூழ்நிலையில், ஏடிஎம் கார்டு இணையதளம் மூலமாக பரிவர்த்தனை செய்வதற்கு புதிய விதிமுறைகளை ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் ரிசர்வ் வங்கி அமல்படுத்த இருக்கின்றது. இந்த புதிய விதிமுறைகள் காரணமாக, என்னென்ன மாற்றங்கள் வரப்போகிறது என்பதை இங்கே நாம் காணலாம்.
இதுவரையில், அமேசான் ஃப்ளிப்கார்ட் உட்பட ஏராளமான இணையதள ஷாப்பிங் தளங்களில் ஏடிஎம் கார்டு உள்ளிட்டவற்றை வைத்து கட்டணம் செலுத்தும்போது முதல் முறை மட்டும் கார்டின் விபரங்களை பதிவிட்டால் போதும் அடுத்த முறை கார்டு பின்புறம் இருக்கும் மூன்று இலக்க எண்ணை மட்டும் வைத்து பணம் செலுத்தி விடலாம்.
ஏனெனில் உங்களுடைய கார்டு விவரங்களை அந்தந்த ஷாப்பிங் நிறுவனங்கள் சேமித்து வைத்துக் கொள்ளும். ஆனால் ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்களின் கார்டு விவரங்களை சேமித்துவைக்க ரிசர்வ் வங்கி தடைவிதிக்க இருக்கிறது.
ஆகவே இனிவரும் காலங்களில் ஒவ்வொரு முறையும் தங்களுடைய ஏடிஎம் கார்டு எண் உள்ளிட்ட விவரங்களை பதிவிட்ட பிறகு தான் பணம் செலுத்த முடியும், இதன் மூலம் உங்களுடைய கார்டு விவரங்களை எந்த ஒரு நிறுவனமும் சேமித்து வைக்க இயலாது. அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்ட கார்டு விவரங்களும் ஜனவரி மாதம் 1-ஆம் தேதிக்குள் அழிக்கப்பட்டுவிடும் என்பது நல்ல செய்திதான் என்று தெரிவிக்கப்படுகிறது.