நாட்டின் புதிய வகை நோய் தோற்று பிப்ரவரி மாதம் முதல் உச்சம் தொடும்! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

0
55

தென் ஆப்பிரிக்காவில் ஆரம்பித்த உருமாறிய நோய்த் தொற்றான ஒமைக்ரான் பெற்று தற்சமயம் உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி இருக்கிறது. நோய்த்தொற்றின் இரண்டாவது அலையை முடிவுக்கு கொண்டு வருவதில் முழுவீச்சில் போராடி வந்த நம்முடைய நாட்டிலும், இந்த புதிய வகை நோய் தொற்று கடந்த 2ஆம் தேதி நுழைந்தது. 17 மாநிலங்களில் இந்த நோய்த்தொற்று இந்தியாவில் கால் பதித்து இருக்கிறது.

இந்த புதிய வகை நோய் தொற்று குறித்து உலகமெங்கும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அந்த விதத்தில் கான்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் காஸியன் மிக்ஸர் மாடல் என்ற புள்ளியல் சூத்திரத்தின் அடிப்படையில் ஒரு ஆய்வை நடத்தினார்கள். இந்த ஆய்வுக்கு இந்தியாவில் நோய் தொற்றின் முதல் மற்றும் இரண்டாவது அலையின் தரவுகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி இருக்கிறார்கள். அதன் முடிவுகள் தற்போது வெளிவந்து இருக்கிறது.

அதன் முக்கிய தகவல் உலகமெங்கும் நிலவி வருகின்ற போக்கை அடுத்து இந்த புதிய வகை நோய் தொற்றின் மூன்றாவது அலை நம்முடைய நாட்டில் டிசம்பர் மாதத்தில் ஆரம்பமாகும் பிப்ரவரி தொடக்கத்தில் இந்த புதிய வகை நோய் தொற்று உச்சம் தொடும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கும் போது எங்கள் தொடக்க கண்காணிப்பு தேதியிலிருந்து 2020 ஜனவரி சுமார் 135 நாட்களுக்குப் பின்னர் நோய் தொற்று பாதிப்பு உச்சமடையும் என்று கணித்து இருந்தோம் என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

ஏற்கனவே தேசிய நோய்தொற்று சூப்பர் மாடல் கமிட்டி உறுப்பினர்களும் அடுத்த வருடம் தொடக்கத்தில் இந்த நோய்த்தொற்றின் மூன்றாவது அலை ஏற்படும் என்று கணித்து இருந்தார்கள். இந்தக் குழுவின் தலைவரான ஹைதராபாத் ஐஐடி பேராசிரியர் வித்யாசாகர் இந்தியாவில் நோய்த்தொற்றின் மூன்றாவது அலை வரும் ஆனால் இரண்டாவது அலையைவிட லேசான பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.