வாக்கு சதவீதம் குறைந்து வருவது கவலையளிக்கிறது!!தலைமை தேர்தல் ஆணையர்!!

0
97

வாக்கு சதவீதம் குறைந்து வருவது கவலையளிக்கிறது!! தலைமை தேர்தல் ஆணையர்!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆராய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தலைமையிலான குழுவினர் உத்தரப்பிரதேசம் சென்றுள்ளனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அவர்கள்

உத்தரப்பிரதேசத்தில் கொரோனா பரவி வரும் நிலையில் தேர்தல் நடத்துவது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளின்  பிரதிநிதிகளுடன் பேசியதாகவும் அப்போது அவர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தேர்தலை நடத்த கேட்டு கொண்டதாக தெரிவித்தார்.

சட்டப்பேரவை தேர்தலின் வாக்குப்பதிவு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்  என்றும் மாநிலம் முழுவதும் உள்ள வாக்கு சாவடிகளில்  இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே நியமிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய தலைமை தேர்தல் ஆணையர் அவர்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 61% வாக்குகள் பதிவானதாகவும், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் 59% வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளதாகவும் தெரிவித்த அவர் இப்படி வாக்கு சதவீதம் குறைந்து வருவது கவலையளிப்பதாகவும் கூறினார்.

மேலும் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என வாக்கு சாவடிக்கு வர முடியாமல் இருப்பவர்களின் இருப்பிடத்திற்கே சென்று வாக்குகளை பெற தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.