அரசு ஊழியர்களுக்கு இனி இது கட்டாயம்! அதிரடியான புதிய உத்தரவு!!

0
268

அரசு ஊழியர்களுக்கு இனி இது கட்டாயம்! அதிரடியான புதிய உத்தரவு!

 

ஒமைக்ரான் மற்றும் கொரோனா பரவலை தொடர்ந்து அரசு ஊழியர்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு செல்வோர் கொரோனா பரிசோதனை சான்றிதழ்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என சார்ஜா மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவித்துள்ளது.

 

சார்ஜா அரசுத்துறை அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்றும், அதோடு தொற்று இல்லை என்கிற பிசிஆர் பரிசோதனை முடிவு சான்றிதழை கையில் வைத்திருக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

 

அதில், 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 14 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட பிசிஆர் முடிவுகளையும், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் 7 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளைவும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

 

மேலும் சான்றிதழ் இல்லாமல், பணியாற்றும் ஊழியர்கள் தகுந்த காரணத்தை சொல்ல வேண்டும் என்றும், அவ்வாறு சான்றிதழ்களோ, சரியான காரணமோ அளிக்கத் தவறும் பட்சத்தில் அவர்களின் ஆண்டு சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என்று அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

Previous articleவலிமை படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!!படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!
Next articleகுடும்பத்திற்கு தலா ரூ.505! இந்த தேதியில் டோக்கன்கள் வழங்கள்!!