60 ஆவது நாளாக ஒரே நிலையில் நீடிக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை!

0
156

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பொறுத்தவரையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறைக்கு மத்திய அரசு இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியிருந்தது.

அதன்படி நாள்தோறும் இந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன.

இந்த நிலையில், தேர்தல் வாக்குறுதிகள் முதலமைச்சர் ஸ்டாலின் பெட்ரோல் விலை குறைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார் அதனடிப்படையில் பெட்ரோலின் விலை 3 ரூபாய் குறைக்கப்பட்டது. அதன் பிறகு தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கடந்த 59 தினங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 101 ரூபாய் 40 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசலின் விலை 91 ரூபாய் 43 காசுகளுக்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், 60வது தினமாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் அதே விலையில் நீடித்து வருகிறது.

Previous article46வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முக்கிய வரி ரத்தானது! மகிழ்ச்சியின் தொழிலாளர்கள்!
Next articleவரும் 5ஆம் தேதி கூடுகிறது 2022ம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம்! சட்டசபை உறுப்பினர்களுக்கு நோய் தொற்று பரிசோதனை!