வரும் 5ஆம் தேதி கூடுகிறது 2022ம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம்! சட்டசபை உறுப்பினர்களுக்கு நோய் தொற்று பரிசோதனை!

0
159

தமிழக சட்டசபை கூட்டம் வரும் 5ஆம் தேதி நடைபெற இருக்கிறது இதில் பங்குபெறும் சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள்,அதோடு சட்ட சபை ஊழியர்கள், உள்ளிட்டோருக்கு நோய் தொற்று பரிசோதனை செய்யப்பட இருக்கிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையாற்றுவது மரபாக இருந்து வருகிறது. அந்த விதத்தில் இந்த 2022-ம் ஆண்டுக்கான அவையின் முதல் கூட்டம் வருகின்ற ஐந்தாம் தேதி ஆரம்பமாகிறது.

இந்தக் கூட்டம் மறுபடியும் சென்னை ஜெயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருக்கின்ற சட்டசபை வளாகத்தில் நடைபெறும் என்று முன்பே தெரிவிக்கப்பட்டது.இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் நோய்த்தொற்று மற்றும் புதிய வகை நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதத்தில் மறுபடியும் ஒரு சில தளர்வுகள் குறைக்கப்பட்டு கட்டுப்பாடுகள் அதிகப்படுத்த பட்டிருக்கின்றன.

இந்த நிலையில், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருக்கின்ற இருக்கைகளில் சமூக இடைவெளிவிட்டு அமைப்பது சிரமம் என்ற காரணத்தால், இந்த வருடமும் சட்டசபைக்கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து இந்த கூட்டத்தில் பங்கு வரும் சட்டசபை உறுப்பினர்கள் எல்லோரும் கட்டாயமாக நோய்த்தொற்று பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதோடு அவை நிகழ்ச்சிகளை சேகரிக்கும் பத்திரிக்கையாளர்கள், புகைப்பட கலைஞர்கள், சட்டசபை ஊழியர்கள் எல்லோரும் கட்டாயமாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

நோய்தொற்று பரிசோதனையை செய்து அதன் சான்றிதழ்களை வைத்திருப்பவர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்குபெற முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், நேற்று எல்லா சட்டசபை உறுப்பினர்களும் அவரவர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நோய்தொற்று பரிசோதனை செய்து கொண்டார்கள் அதோடு மட்டுமல்லாமல் பத்திரிக்கையாளர்கள் மற்றும் அவை ஊழியர்களுக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் நோய்த்தொற்று பரிசோதனையும் செய்யப்பட்டது. அதோடு இன்றும் பரிசோதனை செய்யப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.