அரசாங்கத்திடமே இத்தனை லட்சம் கொள்ளையா? மக்களுக்கு என்ன பாதுகாப்பு? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
வளர்ந்து வரும் காலகட்டத்தில் கொலை கொள்ளை சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒருபுறம் டெக்னாலஜி உபயோகம் செய்து திருடி வருகின்றனர். மறுபுறம் துப்பாக்கி முனை அடிதடி என தொடங்கி தொடர்ந்து திருட்டு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது சென்னையில் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. மக்கள் தினந்தோறும் பரபரப்பாக செயல்பட்டு வரும் நகரங்களில் ஒன்று தான் சென்னை.சென்னையில் அதிகளவு தொழில் துறைகள் செயல்பட்டு வருகிறது.மக்கள் கூட்டம் அதிகளவே காணப்படும்.அவ்வாறு அதிகளவு மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியிலேயே துப்பாக்கி முனையில் திருட்டு ஒன்று தற்பொழுது அரங்கேறி உள்ளது.
இந்த துப்பாக்கி முனை செய்தியை கண்ட மக்கள் அனைவரும் திகைத்துப்போய் காணப்படுகின்றனர்.மக்கள் தினந்தோறும் பயணிக்கும் பறக்கும் ரயில் நிலையத்திலேயே தற்போது துப்பாக்கி முனையில் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது.வரும் காலங்களில் துப்பாக்கி சூட ,துப்பாக்கி முனையில் திருடுவது என அதிகரித்து வருகிறது. அந்த வகையில் திருவான்மியூரில் உள்ள பறக்கும் ரயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளையர்கள் பணத்தை திருடி சென்றுள்ளனர். இச்சம்பவமானது அதிகாலை நேரத்திலேயே நடைபெற்றுள்ளது. மக்கள் வேலைகளுக்கு செல்ல பேருந்து, ரயில் போன்றவற்றை பிடித்து பரபரப்பாக சென்று கொண்டுள்ளனர்.
அவ்வாறு இருக்கும் பட்சத்தில், திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் அதிகாலையிலேயே ஒரு மர்ம கும்பல் நுழைந்தது. இந்த கும்பல் நேரடியாக பயணச்சீட்டு வழங்கும் அறைக்குள் நுழைந்தனர். பின்பு அங்குள்ள அரசு ஊழியர் எதற்கு உள்ளே நுழைகிறீர்கள் என்று கேட்பதற்குள் துப்பாக்கியை காட்டி அங்குள்ள ரூ.1.32 லட்ச பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். அதிர்ச்சியில் செய்வதறியாத அந்த அரசு ஊழியர் திகைத்து நின்றார். பின்பு அந்த கொள்ளையர்கள் சென்ற பிறகு அங்குள்ள ரயில்வே காவல் அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்பு சம்பவ இடத்திற்கு வந்த காவல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் எழும்பூர் ரயில்வே டிஎஸ்பி ஸ்ரீகாந்த் தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில்வே நிலையத்தில் எந்த ஒரு சிசிடிவி கேமராகளும் பொருத்தப்படவில்லை. அதை அறிந்து கூட கொள்ளையடிக்க திட்டமிட்டு இருக்கலாம் என்றும் கூறுகின்றனர். மக்கள் அதிக அளவு நடமாடும் இடத்திலேயே இவ்வாறு துப்பாக்கிமுனை காட்டி கொள்ளை அடித்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சி அளிக்கிறது.அதுமட்டுமின்றி அரசாங்க பணத்திற்கே பாதுகாப்பு இல்லை என்ற பட்சத்தில் மக்களுக்கு எங்கு பாதுகாப்பு இருக்கப்போகிறது என்றும் பலர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.