10 11 12 வகுப்பு மாணவர்களுக்கு விடுப்பு! அரசின் அதிரடி நடவடிக்கை!

0
67
2 month holiday for schools! Students in celebration!
2 month holiday for schools! Students in celebration!

10 11 12 வகுப்பு மாணவர்களுக்கு விடுப்பு! அரசின் அதிரடி நடவடிக்கை!

தமிழகத்தில் மாணவர்கள் தற்போது தான் நேரடி வகுப்புகளுக்கு செல்கின்றனர். முதலில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை செப்டம்பர் மாதம் முதல் தேதியில் பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளி திறந்த நாள் முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு சென்று பாடம் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு அடுத்ததாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு எப்பொழுது பள்ளிகள் திறக்கப்படும் என்று பல கேள்விகள் எழுந்து வந்தது. அவர்களுக்கு முதலில் சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டது. அதனையடுத்து நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது.

அவ்வாறு இருந்த நிலையில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் தமிழக அரசு ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே பாடங்களை கற்பிக்க உத்தரவிட்டுள்ளனர். மேலும் மாணவர்களின் பாதுகாப்பிற்காக தடுப்பூசி செலுத்தும் பணி  இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. இந்த உத்தரவை கடந்த மாதம் 25ஆம் தேதி, 15 முதல் 18 வயது உடைய மாணவர்களுக்கு கோவாக்சின் செலுத்தப்படும் என்று கூறினர். மத்திய சுகாதார அமைச்சகம் கூறியதற்கு ஏற்ப மாநில அரசுகளும் தடுப்பூசி செய்வதற்கு பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வைத்துள்ளனர்.அதுமட்டுமின்றி போதுமான அளவு தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் 32,029 தடுப்பூசி மையங்கள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் ஒரு சில இடங்களில் மட்டுமே தற்போது 15 முதல் 18 வயதிற்கான தடுப்பூசி செலுத்தப்படும் என்று கூறியுள்ளனர். மேலும் நோடல் அதிகாரிகளையும்  நியமனம் செய்துள்ளனர். இவர்கள் மாணவர்கள் முறையாக தடுப்பூசி செலுத்துகிறார்களா என்பதை கண்டறிய இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தொற்று அதிகரிப்பு காரணமாக மேற்கு வங்க அரசு தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளித்துள்ளது. அதனால் பள்ளியில் பயிலும் மாணவர்கள் அவர்களின் பெற்றோரின் தொலைபேசி எண்ணிற்கு தடுப்பூசி செலுத்தும் மையங்களின் விவரங்கள் அனுப்பப்படும்.

பெற்றோர்கள் அதனை கண்டு அவரது பிள்ளைகளை அழைத்து சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். மேலும் ஒரு சில மாநிலங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. அவ்வாறு செயல்பட்டு வரும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தடுப்பூசி செலுத்திய பிறகு ஓய்வு எடுக்க அவர்களுக்கு விடுப்பு அளிக்கலாம் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.அதனால் 15 முதல் 18 வயதுடைய 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்திய பிறகு ஓய்வு எடுத்துக்கொள்ள விடுப்பு அளிக்கப்படும். அவ்வாறு தடுப்பூசி செலுத்த செல்லும் மாணவர்கள் பத்தாம் வகுப்பு அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டை எடுத்துக்கொண்டு செல்லவேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு கோவாக்சின்  தடுப்பூசி செலுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதனால் நாளடைவில் 12 வயதிற்கு மேற்பட்டோருக்கு  தடுப்பூசிகள் செலுத்தப்படும்.