ஜன்னல் வழியாக காதலை பிரதிபலித்த பிரபல நடிகர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

ஜன்னல் வழியாக காதலை பிரதிபலித்த பிரபல நடிகர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

கொரோனா தொற்றானது தற்சமயத்தில் அனைவருக்கும் பெரும் அடியாக விழுந்து வருகிறது. அந்த வகையில் பாமர மக்கள் முதல் பிரமுகர்கள் அரசியல்வாதிகள் சினிமா பிரபலங்கள் என அனைவருக்கும் வரிசையாக தோற்று பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும் தொற்று பாதிப்பு சிறிதும் குறையாமல் அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்து மக்களைப் பாதித்து வருகிறது.

அந்த வரிசை பட்டியலில் நாம் பல சினிமா பிரபலங்கள் அரசியல் வாதிகளில் இழந்து நிற்கின்றோம். ஒரு தொற்று முடிவடைந்துவிட்டது என்று நிம்மதி அடைவதற்குள் அதன் உருமாற்றம் வந்துவிடுகிறது. தற்போது தமிழ் திரையுலகில் நடிகர் அருண் விஜய்க்கு தொற்று உறுதியாக இருப்பதை அவர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து நடிகை மீனாவுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது தெரிவித்தார். தற்போது தெலுங்கு பட நடிகர் நிதின் கடந்த 2020 ஆம் ஆண்டு ஷாலினி ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி ஒரு ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது அவரது மனைவி ஷாலினி ரெட்டிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.அதனால் அவரது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று அவர் அவருடைய மனைவிக்கு பிறந்தநாள்.

இச்சமயம் அவருக்கு தொற்று பாதிப்பு  ஏற்பட்டதால் பிறந்தநாள் கொண்டாட முடியாமல் போனது.அதனால் அவர் சிகிச்சை பெற்று வரும் அறைக்கு கீழிருந்து அவரது மனைவியை ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்கும் படி கூறி, கேக் வெட்டி அவரது மனைவியின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எத்தனை பெருந் தொற்று வந்தாலும் காதலுக்கு முடிவு இல்லை என்பதை கூறி இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். மேலும் ஹாப்பி பர்த்டே மை லவ் என்றும் கூறியுள்ளார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Comment