இன்று இரவு முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்! மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

0
203

இன்று இரவு முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்! மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

இந்தியாவில் மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றிலிருந்து மக்களை காக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மேலும் தொற்றிலிருந்து மக்களை காக்க அந்தந்த மாநிலங்கள் பல கட்டுப்பாடுகளை விதித்தும், ஊரடங்கை அமல்படுத்தியும் வருகின்றன.

அந்த வகையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கொரோனா பரவலை தடுக்க வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்துவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

அந்த வகையில் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள் கிழமை காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இன்று நிறைவடைய இருந்த இரவு நேர ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து அந்த மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பால்  இன்று இரவு 8 மணி முதல் பெங்களூரு நகரில் ஊரடங்கு விதிமுறைகளை கடுமையாக்கி அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதேபோல், சலூன், அழகு நிலையம், உடற்பயிற்சி நிலையம், மால்கள் திறக்க அனுமதி இல்லை. உள் அரங்குகளில் நடக்கும் திருமண நிகழ்ச்சியில் 100 பேரும், திறந்த வெளியில் நடக்கும் திருமணத்தில் 200 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

நகர பேருந்து சேவை, ஆட்டோ, வாடகை கார் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரெயில் சேவை ஒரு சில மாற்றங்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவச பொருட்கள் விற்பனை, பழம், காய்கறி, பால், மருந்தகம், ஆஸ்பத்திரி மற்றும் பெட்ரோல் நிலையங்கள் வழக்ககம் போல் இயங்கும் என்று அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous articleமேல துணியே இல்லாமல் அதை பிடித்துக்கொண்டு சிம்பு பட கதாநாயகி செய்த செயல்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
Next articleஜன்னல் வழியாக காதலை பிரதிபலித்த பிரபல நடிகர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here