இன்று லாக் டவுனில் இவர்களுக்கு மட்டும் அனுமதி
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் 2020 முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.இதில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அவ்வப்போது தளர்வு செய்து அரசு அறிவித்து வந்தது.
இந்நிலையில் கொரோனாவின் உருமாறிய ஓமைக்கிரான் பரவல் தொடர்ந்து அதிகரிப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரமாக கடைபிடிக்க ஆரம்பித்துள்ளது.அந்த வகையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
அந்த அடிப்படையில் இன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.இதனால் பேருந்துகள் மற்றும் கடைகள் எதுவும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.அதே நேரத்தில் உணவு விடுதிகள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு வீடுகளுக்கே சென்று டெலிவரி செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது.