இன்றுடன் முடிவுக்கு வரும் ஊரடங்கு! மருத்துவ நிபுணர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!

0
74

நாடு முழுவதும் புதிய வகை நோய் தொற்று பாதிப்பு அதிகரிக்க ஆரம்பித்து இருக்கின்ற சூழ்நிலையில், தமிழ்நாட்டிலும் நோய் தொற்று பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்து விட்டது. ஒரு புறம் தடுப்பூசி செலுத்தும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வந்தாலும், இன்னொரு புறம் நோய் தொற்று பாதிப்புக்கு ஆளானவர்களில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக, பொதுமக்கள் மறுபடியும் அச்சமடைய தொடங்கியிருக்கிறார்கள், கடந்த மாதம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய இருந்த சூழ்நிலையில், நோய் தொற்று பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் வைத்து இன்றுவரை அந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனையடுத்து புதியவகை நோய்த்தொற்று பரவலும் அதிகரித்து வந்ததால் கடந்த 6ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும், பிறப்பிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றைய தினம் முடிவடைய இருக்கின்ற நிலையில்,முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மதியம் 12 மணி அளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன், உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கிறார்கள்.

தற்சமயம் நோய்த்தொற்று பரவல் வேகம் எடுத்திருக்கிறது. இதன்காரணமாக, இந்த ஊரடங்கு இந்த மாதம் இறுதி வரையில் நீட்டிக்க வாய்ப்பு உள்ளது, அதோடு கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. வரும் 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது ஆகவே பொங்கல் பண்டிகைக்கு பின்னர் மூவரும் வேகத்தை பொருத்து ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முடிவு மேற்கொள்ளப்படும் என்றும் சொல்லப்படுகிறது.