ஹிந்துக்களுக்கு எதிரான பேச்சு நடவடிக்கை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!

0
135

ஹிந்துக்களுக்கு, எதிராக தொடர்ந்து வெறுப்பு பேச்சு பேசும் தலைவர்களை கைது செய்ய வேண்டும்; என கோரி உச்ச நீதிமன்றத்தில் இரண்டு ஹிந்து அமைப்புகள் மனுத்தாக்கல் செய்துள்ளன.

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில், நடந்த தர்ம சன்சத் மாநாட்டில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசப்பட்ட வெறுப்பு பேச்சுகள் பற்றி உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் எனக் கோரி, இரண்டு ஹிந்து அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

ஹிந்தி சேனா அமைப்பின் தலைவர், விஷ்ணு குப்தா தாக்கல் செய்துள்ள மனுவில், ஹரித்வார் மாநாட்டில் ஹிந்து தலைவர்களின் பேச்சுகள் ஹிந்து மதத்துக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதலுக்கான பதில்கள் தான் எனக் கூறியுள்ளார். வெறுப்பு பேச்சுகள் இல்லை. ஹிந்து ஆன்மீக தலைவர்கள் மீது அவதூறு ஏற்படுத்தும் நோக்கிலேயே அவர்களது பேச்சுக்கள் வெறுப்பு பேச்சுகளாக
சித்தரிக்கப்படுகிறது.

நீதிக்கான, ஹிந்து முன்னணி அமைப்பு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகளை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது; அதேபோல, ஹிந்துக்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்களையும் உச்சநீதிமன்றம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹிந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Previous articleதொல்லியல் துறை பிதாமகன் நாகசாமி மறைவு; பிரதமர் மோடி இரங்கல்!
Next articleஐரோப்பிய நாடுகளில் முடிவுக்கு வருகிறதா கொரோனா? உலக சுகாதார அமைப்பு தகவல்!