ஐரோப்பிய நாடுகளில் முடிவுக்கு வருகிறதா கொரோனா? உலக சுகாதார அமைப்பு தகவல்!

0
67

ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வந்த கொரோனா, முடிவுக்கு வர இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஒமைக்ரான் பரவல் பேரிடராகப் பரவிய நிலையில், மார்ச் மாதத்திற்குள் ஐரோப்பிய நாடுகளில் 60% பேரை பாதிக்கும் என்று கூறப்பட்டது. இதன் காரணமாக அது முடிவுக்கு வரும் என்று நம்பப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா பாதிப்புகளால், உலகின் பல நாட்டு மக்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர்.

தற்போது உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வின் மூலம் தெரிவித்துள்ள கருத்துக்கள் மக்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது.

செய்தியாளர்களிடம் பேட்டியளித்த உலக சுகாதார அமைப்பின், ஐரோப்பிய பிரிவுத் இயக்குனர் ஹான்ஸ் குலுகே மார்ச் மாதத்திற்கு பிறகு கொரோனா விலகத் தொடங்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.