மார்ச் முதல் பள்ளிகள் திறப்பு- பச்சைக்கொடி காட்டிய அரசு!

0
224

ஆப்கானிஸ்தான் நாட்டில் மார்ச் மாதம் முதல், அனைத்து மாணவிகளும் பள்ளிக்கு செல்ல அனுமதிக்கப்படுவதாக தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது தாலிபான் அமைப்பு. தாலிபான் அமைப்பின் மூத்த தலைவர் முல்லா அகுந்த் தலைமையில் தற்காலிக அரசு செயல்பட்டு வருகிறது.

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள் பள்ளிகளுக்கு மாணவிகள் செல்ல தடை விதித்தனர் மேலும், பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது வெளியே தனியாக நடமாட கூடாது போன்ற சட்டங்களை நடைமுறைப்படுத்தினார். இந்த சட்டமானது பெண்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஆசிரியைகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மாணவிகள் பள்ளிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், புதிய கல்வி ஆண்டு முதல் மாணவிகள் பள்ளிகளுக்கு செல்ல அனுமதி அளிக்கப்படுவதாக தாலிபான்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

Previous articleதமிழகத்தில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!
Next articleவந்துவிட்டது கொரோனாவின் அடுத்து திரிபு! ஒமைக்ரானை விட வேகமாக பரவுகிறதா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here