குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு! இதோ அரசின் முக்கிய தகவல்!
வருடம்தோறும் நாம் உண்ணும் உணவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகிறோம். இது தமிழர்களுக்கே உரிதான நாளாக உள்ளது.இந்த பொங்கல் பண்டிகை தினங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம்.தமிழகர்களின் வீரத்தை பறைசாற்றும் விதமாக இது பேசப்படுகிறது.இம்முறை நடைபெறுமா என்று பல குழப்பங்கள் எழுந்து வந்த நிலையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் வழக்கம் போல் நடைபெற்றது.இந்த பொங்கல் பண்டிகை சமயத்தில் தமிழக அரசு பல சிறப்பு பரிசு தொகுப்புகளை அளிப்பது வழக்கம்.
சென்ற முறை பொங்கல் தொகுப்பு மற்றும் பொங்கல் பரிசாக பணம் வழங்கப்பட்டது. ஆனால் இம்முறை ஆட்சி மாறிய சூழலில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு மட்டுமே பரிசாக வழங்கப்பட்டது. எந்தவித பணமும் வழங்கப்படவில்லை. இது மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. பல கோடி ரூபாய் செலவு செய்து இருபத்தி ஒரு பொருட்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கியும் அது தரமற்ற தாகவே இருந்தது.
இதுகுறித்து மக்கள் பலர் புகார்கள் அளித்து வந்தனர்.அந்த புகார்களையடுத்து தமிழக முதலவர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் குழு அமைத்து விசாரணை செய்து வந்தனர்.மேலும் முதலவர் அவர்கள் அவ்வபோது நியாய விலைகடைக்கு சென்று திடீர் சோதனை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.அதுமட்டுமின்றி இந்த பொருட்கள் அனைத்தும் வடமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. பொங்கல் பண்டிகைக்கு முன்பு பரிசு தொகுப்பு வாங்காதவர்கள் இம்மாதம் முழுவதும் வாங்கிக்கொள்ளலாம் என கூறி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அந்த அறிவிப்பின் அடிப்படையில் இன்றுடன் பொங்கல் தொகுப்பு பெறுவதற்கு கால அவகாசம் முடிவடைய உள்ளது. அதனால் பொங்கல் தொகுப்பு பெறாதவர்கள் இன்று சென்று வாங்கிக் கொள்ளுமாறு கேட்டுள்ளனர்.