இனி இரவு ஊரடங்கு ரத்து! இதோ அரசின் புதிய வழிகாட்டுதல்கள்!

0
92
No more night curfews canceled! Here are the government's new guidelines!
No more night curfews canceled! Here are the government's new guidelines!

இனி இரவு ஊரடங்கு ரத்து! இதோ அரசின் புதிய வழிகாட்டுதல்கள்!

கொரோனா  தொற்றானது இரண்டு ஆண்டுகளை கடந்தும் தற்போது வரை மக்களைப் பாதித்து வருகிறது. இது முற்றுப்புள்ளி இன்றி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. ஒவ்வொருமுறை இவற்றிலிருந்து மக்கள் மீளும் போதெல்லாம் பழைய நிலைக்கு திரும்பி விடுவோம் என்று பல கனவுகளைக் காண்கின்றன. அந்த கனவுகள் ஓர் சில நாட்களிலேயே உடைந்து போய் விடுகிறது. ஏனென்றால் இந்த தொற்று ஒவ்வொரு ஆண்டும் புதிய பரிமாற்றத்தை ஏற்படுத்திக் மக்களுக்கு அதிக அளவில் பாதிப்பைத் தருகிறது.

அவ்வாறு மக்கள் பாதிக்கப்படும் போது மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களின் பாதுகாப்பிற்காக பல நடவடிக்கைகளை அமல்படுத்துவர். அவ்வாறு கடந்த முறை ஒமைக்ரான் தொற்று அதிக அளவில் பரவியது.குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் தோற்று எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. அதனால் அம்மாநில அரசு இரவு ஊரடங்கு அமல் படுத்தியது. அதுமட்டுமின்றி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளித்து இருந்தது. தற்பொழுது தொற்று பாதிப்புகள் குறைந்த நிலையில், கட்டுப்பாடுகள் அனைத்தையும் தளர்வு படுத்தியுள்ளது.

அந்த வகையில் இரவு ஊரடங்கு ரத்து செய்தல் புதிய கட்டுப்பாடுகளை வகுத்துள்ளது. இன்று முதல் 1 மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தவும் முடிவு செய்துள்ளது. அதேபோல பேருந்துகள் போன்ற போக்குவரத்து வாகனங்களில் இருக்கை கேற்ப பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்கலாம் என கூறியுள்ளனர். மேலும் உணவு விடுதிகள், பார்கள் என அனைத்திலும் 100% மக்களுடன் செயல்படலாம் என அனுமதி அளித்துள்ளனர்.

அது மட்டுமின்றி மக்கள் கூடும் முக்கியமான பொது இடங்களில் வரும் நபர்கள் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். அதேபோல திருமணங்களுக்கு 300 பேர் வரை செல்லலாம் என கூறியுள்ளனர். மேலும் கண்காட்சிகள் போராட்டங்கள் ஏதேனும் சமூக கூட்டங்கள் போன்றவை நடத்த தடை செய்யப்பட்டுள்ளது.