தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள், என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒட்டுமொத்தமாக நடைபெறவிருக்கிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியாகும்.
இதற்கு நடுவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பான ஆலோசனைகளை தீவிரப்படுத்தியிருக்கின்றன.
இதனைத்தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து திமுகவின் மூத்த நிர்வாகிகளுடன் அந்த கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தியிருக்கிறார். அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு மூத்த தலைவர்களும் பங்கேற்றதாக சொல்லப்படுகிறது.
இந்த ஆலோசனையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட திமுக திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 10000க்கும் அதிகமான இடங்களில் போட்டியிட திமுக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கூட்டணிக் கட்சிகளுக்கு 10 முதல் 12 சதவீத இடங்களை ஒதுக்க திமுக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியருக்கிறது.