இதெல்லாம் நல்லதுக்கில்ல சொல்லிட்டேன்! மத்திய அரசை வசைபாடிய டிடிவி தினகரன்!

0
199

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய நீர்வள ஆணையம் அறிக்கை வழங்கியிருப்பது கண்டனத்திற்குரியது என்று டிடிவி தினகரன் கூறியிருக்கிறார்.

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்த மறுஆய்வு உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்று மத்திய நீர்வள ஆணையம் மற்றும் அணை கண் கண்காணிப்பு குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்திருக்கின்றன, இது கண்டனத்திற்குரியது என கூறியிருக்கிறார் டிடிவி தினகரன்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கின்ற வலைதள பதிவில் முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய நீர்வள ஆணையம் அறிக்கை வழங்கியிருப்பது கண்டனத்திற்குரியது என தெரிவித்திருக்கிறார்.

மேலும் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவினர் முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பானது என்று உறுதியாக தெரிவித்துவிட்ட பின்னரும் கூட திடீரென்று தேவையில்லாத பிரச்சனையை கிளப்புவது நல்லதல்ல இதன் காரணமாக, தமிழகம் மற்றும் கேரள மக்களிடையே தேவையில்லாத கசப்புணர்வு உண்டாகும் என கூறியிருக்கிறார் டிடிவி தினகரன்.

ஆகவே மத்திய நீர்வள ஆணையம் நடுநிலையுடன் நடந்துகொண்டு அவர்களுடைய அறிக்கையை வாபஸ் பெற வேண்டும் இந்த கோரிக்கையை தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்தும் விதத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வலுவான எதிர்வினையாற்ற வேண்டும் டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

Previous articleநகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் திமுக போட்ட அதிரடி வியூகம்! கதறும் எதிர்க்கட்சிகள்!
Next articleஅவர்கள் செய்த துரோகத்தால் விழுந்த நாங்கள் மீண்டெழுவோம் பாமக அதிரடி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here