விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தில் பழைய ஜோடி! யார் தெரியுமா?

0
199

விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தில் பழைய ஜோடி! யார் தெரியுமா?

சிவகார்த்திகேயன் நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளிவந்த படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் ஆனார் ஸ்ரீ திவ்யா. இந்த படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கி இருந்தார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றியை தொடர்ந்து, ஸ்ரீ திவ்யா அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார். அதில் குறிப்பாக, மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அவருக்கு ஜோடியாக காக்கி சட்டை படத்தில் நடித்திருந்தார்.

இந்த இரு படங்களை தவிர்த்து ஜீவா, வெள்ளைக்கார துரை, காஷ்மோரா, மருது உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றார். இதில், விக்ரம் பிரபு நடிப்பில் 2014ஆம் ஆண்டு வெளிவந்த படம் வெள்ளைக்கார துரை. இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடித்து இருந்தார்.

இந்த நிலையில், விக்ரம் பிரபு தற்போது நடிக்க உள்ள படம் டைகர். பல ஆண்டு இடைவெளிக்கு பிறகு, வெள்ளைக்கார துரை படத்தை தொடர்ந்து, விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்க, நடிகை ஸ்ரீ திவ்யா டைகர் படத்தில் இணைந்திருக்கிறார். இப்படத்திற்கான பூஜை நேற்று போடப்பட்டது. இந்த படத்திற்கு பிரபல இயக்குனர் முத்தையா கதை, வசனம் எழுத உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Previous articleஇந்திய ராணுவத்திடம் அடி வாங்கிய சீன ராணுவ அதிகாரிக்கு கிடைத்த கவுரவம்!
Next articleIPL மெகா ஏலம்! 1214இல் இருந்து 590ஆக குறைவு!!