மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த ‘டான்’ படத்தின் பாடல்!
டாக்டர் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது அயலான், டான் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன. அந்த வகையில், அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டான்’ திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே சூர்யா நடித்திருக்கிறார். அனிருத் இந்த படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்.
கல்லூரி கதைக்களத்தில், முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி கல்லூரி மாணவர்களாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரோடக்சன்ஸ் நிறுவனம் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்தப் படத்தை தயாரித்து இருக்கின்றன.
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில், அதன் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. படத்தின் வெளியீட்டுக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், ‘டான்’ படம் மார்ச் 25ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் படத்தை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்நிலையில், படத்தின் வெளியீட்டுக்கான பணியில் படக்குழுவும் தீவிரம் காட்டி வருகிறது.
சமீபத்தில் ‘டான்’ படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்த பாடலை படக்குழு நேற்று (3.2.2022) வெளியிட்டது. இயக்குநர் விக்னேஷ் சிவன் வரிகளில் ஆதித்ய குரலில் வெளியாகி உள்ள இந்தப் பாடல் யூடியூப் தளத்தில் மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.