இது மிகவும் தவறான செயல்! நோபல் பரிசு வென்ற மலாலா கருத்து!!

0
116

இது மிகவும் தவறான செயல்! நோபல் பரிசு வென்ற மலாலா கருத்து!!

கர்நாடக மாநிலத்தில் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் பர்தா, ஹிஜாப் போன்றவை அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து கல்லூரிக்கு வந்துள்ளனர். இதனால் கல்லூரி நிர்வாகம் மாணவிகளை உள்ளே அனுமதிக்கவில்லை.

முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து வந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்து மாணவர்கள் காவித்துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதனால், இந்த விவகாரம் நாடு முழுவதும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

ஹிஜாப் விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையாக எழுந்துள்ள நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் சமத்துவம் மற்றும் ஒருமைப்பாட்டை காக்கும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சீருடையிலேயே வர வேண்டும் என அண்மையில் அம்மாநில அரசு அறிவித்தது. கல்லூரி மாணவர்களுக்கான சீருடையை அந்தந்த கல்லூரி நிர்வாகங்களே முடிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்திருந்தது.

இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என்ற கல்லூரியின் உத்தரவை எதிர்த்து அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஹிஜாப் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்க உள்ளது.

இந்நிலையில், நேற்று கர்நாடக மாநிலத்தில், பல்வேறு இடங்களில் ஹிஜாப்-க்கு எதிரான போராட்டம் நடைபெற்ற நிலையில், இந்த போராடம் வன்முறையாக வன்முறையாக மாறியது. போலீசார் இந்த போராட்டத்தை கட்டுபடுத்த துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வென்ற பாகிஸ்தானை சேர்ந்த மலாலா இந்த ஹிஜாப் விவகாரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரும் காரணத்தால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்படுவது தவறான செயல் என குறிப்பிட்டுள்ளார்.

Previous articleகல்லூரியில் ஆன்லைன் தேர்வுகள் ரத்து? போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள்!
Next articleஇந்த வார்டுகளுக்கான தேர்தல் மட்டும் ரத்து!