மக்களே இவைகளிடமிருந்து விலகி இருங்கள்! இந்த விலங்குகளுக்கு ஒமைக்ரான் உறுதி!
கொரோனா தொற்றானது வருடந்தோறும் அதன் புது பரிமாற்றத்தை உருவாக்கிக்கொண்டே செல்கிறது. பலவித கட்டுப்பாடுகளை அமல் படுத்தியும், தடுப்பூசி நடைமுறைக்குக் கொண்டு வந்தும் தொற்று பாதிப்பு குறைந்தபாடில்லை. முதலில் கொரோனாவாக இருந்தது ,பின்பு டெல்டா ,டெல்டா ப்லெஸ் ஆக மாறியது. அதனையடுத்து ஓமைகிரான் மற்றும் ஏ பிளஸ் வகை தொற்றாக மாற்றமடைந்துள்ளது. இதன் அடுத்த பரிணாம வளர்ச்சியாக டெல் மைக்ரான் சில இடங்களில் பரவி வருகிறது.இந்த தொற்று அனைத்தும் மனிதர்களுக்கு மட்டுமே பரவி வந்தது.
ஆனால் தற்பொழுது இந்த ஒமைக்ரான் தொற்றானது அமெரிக்காவில் நியூயார்க்கில் நகரில் உள்ள வெள்ளை நிற வால் கொண்ட மானுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தற்போது அமெரிக்காவில் 30 மில்லியனுக்கும் மேல் இந்த வெள்ளை நிறம் கொண்ட மான்கள் இருக்கின்றது. இந்த ஒரு மானுக்கு தற்பொழுது தொற்று உறுதியாகி உள்ளதால் மீதமுள்ள அனைத்தும் மான்களுக்கும் தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளது என பென்சில்வேனியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இது குறித்து விளக்கமான தகவலை பென்சில்வேனியா மாகாண பல்கலைகழகத்தின் கால்நடை உதவியாளர் சுரேஷ் என்பவர் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, ஒரு வைரஸானது மனிதருக்கு இடையே அதிக அளவு பரவுகிறது.
விலங்குகளுக்கும் தொற்று பரவி உள்ளதால் அது மனிதருக்கும் பரவ அதிக வாய்ப்புள்ளது என கூறினார். மேலும் இந்த வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதருக்கு பரவ நேர்ந்தால் அது வேறு ஒரு பரிமாற்ற வளர்ச்சியை அடையலாம். அதனால் தற்போது நடைமுறையில் உள்ள தடுப்பூசிக்கு மாறாக மாற்று தடுப்பூசி நடைமுறைப்படுத்த நேரிடும் என கூறினார். ஆனால் இதுவரை விலங்கிடம் இருந்தும் மனிதர்களுக்கு வைரஸ் பரவியது போன்ற எந்த ஒரு பாதிப்பும் உறுதியாகவில்லை.