10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு! கல்வி அதிகாரிகள் ஆலோசனை!!

0
174

10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு! கல்வி அதிகாரிகள் ஆலோசனை!!

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றால் மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் தொற்றின் பரவல் தற்போது குறைந்து வருவதை தொடர்ந்து ஒருசில கட்டுபாடுகளுடன் இந்த (பிப்ரவரி) மாதம் 1-ஆம் தேதி முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டன.

இதனிடையே, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்றும் கொரோனா தொற்று பாதிப்பு இருந்தாலும் கூட 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடத்தி முடிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

எனவே, அதனடிப்படையில் பொதுத்தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே தொடங்கி உள்ளன. அந்த வகையில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் கடந்த ஒன்பதாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 28-ம் தேதி இரண்டாம் திருப்புதல் தேர்வு தொடங்க உள்ளது.

இதன் காரணமாக, மார்ச் மாதத்துக்குள் பாடத்திட்டங்களை விரைவாக முடித்து 2-வது கட்ட திருப்புதல் தேர்வு நடத்த பள்ளி கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது. மேலும், வருகிற நாட்களில் சனிக்கிழமைகளிலும் வகுப்புகளை நடத்தி மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே பொதுத்தேர்வை நடத்துவதில் அரசு தீவிரமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் உயர் கல்விக்கு செல்லும் மாணவர்கள் நலன் பாதிக்கப்படாத வகையில் பொதுத்தேர்வை நடத்துவது குறித்து கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த ஆலோசனையானது, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், அரசு தேர்வுத்துறை அதிகாரிகள் ஆகியோருடன்   நடைபெற உள்ளது.

இதில், பொதுத்தேர்வை எத்தனை நாட்கள் நடத்துவது? ஒவ்வொரு தேர்வுக்கும் இடைவெளி விடுவதா? தொடர்ச்சியாக நடத்தி முடிப்பதா? என்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் மேலும், இந்த கூட்டத்தில் பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை இறுதி செய்யப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

Previous article‘பீஸ்ட்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளாக வெளியாக உள்ள ‘அரபிக் குத்து’ பாடல்!
Next articleமாணவிகள் பள்ளிக்குள் செல்ல அனுமதி மறுப்பு!