8 ஆண்டுகளில் இல்லாத அளவில் ஜிடிபி சரிவு: முதலீட்டாளர்கள் கவலை
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 ஆண்டுகளில் இல்லாத அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்றுடன் முடிவடையும் 2-வது காலாண்டிற்கான ஜிடிபி 4.5 சதவீதமாக குறைந்துள்ளதாக வெளிவந்துள்ள தகவல் முதலீட்டாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது
கடந்த ஆண்டு இதே 2-வது காலாண்டில் 6.9 சதவிகிதமாக இருந்த ஜிடிபி இந்த ஆண்டு 4.5 சதவிகிதமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
சமீபத்தில் மக்களவையில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘இந்தியாவின் உண்மையான ஜிடிபி 2009-2014ல் 6.4% ஆக இருந்ததாகவும், 2014-2019 ல் ஜிடிபி மதிப்பு 7.5% உயர்ந்துள்ளதாகவும், எனவே ஜிடிபி குறித்து தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கூறியிருந்தார்.
நிதியமைச்சர் கூறிய இரண்டே நாளில் 4.5 சதவீதமாக குறைந்துள்ளதாக வெளிவந்துள்ள தகவல் மத்திய அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது
ஜிடிபி மிக மோசமாக சரிந்துள்ளதன் மூலம் பாஜகவின் அரசு மோசமான சாதனையை செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது. மேலும் இந்தியாவின் பொருளாதாரத்தை மிக மோசமாக படுகுழிக்கு இந்த அரசு தள்ளிவிட்டதாகவும், இந்தியா மிக மோசமான இருண்ட காலத்துக்கு சென்றுவிட்டதாகவும் அக்கட்சி கூறியுள்ளது.