மராட்டிய மாநிலம் மும்பை டோம்பிவிலியை சார்ந்த பெண் சுப்ரியா ஷிண்டே, இவர் கடந்த 15 ஆம் தேதி தன்னுடைய வீட்டில் சோபாவில் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கொலை செய்தவர் யார் என்பது தொடர்பாக விசாரணை செய்து வந்தார்கள்.
சுப்ரியா ஷிண்டே வீட்டின் முன்பு கொலையாளி விட்டுச் சென்ற காலனி இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தார்கள். இதுதொடர்பாக சுப்ரியா ஷிண்டே கணவரிடம் விசாரணை செய்ததில் அவருடைய நண்பரான நபி மும்பையை சேர்ந்த விஷால் தாவார் என்பவரின் காலணி என தெரியவந்தது.
ஏனென்றால் இருவரும் கடையில் ஒரே மாதிரியான காலணிகளை வாங்கியிருக்கிறார்கள். இதனை தொடர்ந்து காவல்துறையினர் விஷால் தாவாரை கைது செய்து விசாரித்ததில் அவர் தான் சுப்ரியா ஷிண்டேவிசி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தெரிவித்ததாவது சுப்ரியாவின் கணவர் வேலைக்காக வெளியே சென்றிருந்தார், அவருடைய மகன் பள்ளிக்கூடம் சென்று இருந்தால் வீட்டில் தனியாக இருந்த சுப்ரியாவை சந்திக்க விஷால் வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அங்கே அவரிடம் உல்லாசமாக இருக்க வருமாறு தெரிவித்திருக்கிறார்.
இதனை கேட்டு சுப்ரியா மறுத்து விட்டு வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கண்டித்திருக்கிறார். ஆத்திரமடைந்த விஷால் அங்கிருந்த நைலான் கயிற்றினால் அவருடைய கழுத்தை இறுக்கினார். இதில் மூச்சு திணறி சுப்ரியா ஷிண்டே உயிரிழந்ததால் உடலை மறைக்க சோபாவிற்கு அருகில் மறைத்து வைத்துவிட்டு தப்பி சென்றதாக அவர் தெரிவித்திருக்கிறார்.