இளைஞர்களே பெண்களே +2 முடித்து இருக்கிறீர்களா? இதோ உங்களுக்கான ஒரு புதிய வாய்ப்பு!

0
60

மத்திய தொழில் பாதுகாப்பு படை தலைமை காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்பதாக தெரிவித்திருக்கிறது. அதாவது இந்த ஆள் சேர்ப்பு செயல்முறை (CISF head Constable Gd recruitment 2022) மூலமாக ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் சுமார் 249 காலியிடங்கள் நிரப்பவிருக்கிறது என தெரிவித்திருக்கிறது. ஆர்வமும், தகுதியும், இருக்கின்ற விண்ணப்பதாரர்கள் சி.ஐ.எஸ். எஃப் அதிகாரப்பூர்வ இணையதளமான cisf.gov.in மூலமாக இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம்.

விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை வரும் மார்ச் மாதம் 31ஆம் தேதி அல்லது அதற்கு முன்பாக சமர்ப்பிக்க வேண்டும். அதன்பிறகு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அதோடு மேலும் இது தொடர்பான தகவலுக்கு விண்ணப்பதாரர் கட்டுரையை முழுமையாக பார்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆண் விண்ணப்பதாரர்களுக்கான காலிப்பணியிடங்கள் 181 என்றும், பெண் விண்ணப்பதாரர்களின் காலிப்பணியிடங்கள் 68 என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு நிகழ்விலுமிருக்கின்ற காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தற்காலிகமானது மற்றும் நிர்வாக காரணங்களால், ஆட்சேர்ப்பு செயல்முறையின் எண்ணிக்கை எந்த நிலையிலும், மாறலாம். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தெளிவான தகவலை பெறுவதற்கு மேலே சொல்லப்பட்ட இந்த இணையதளத்தில் அறிவிப்பை பார்த்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விளையாட்டு மற்றும் தடகள போட்டிகளில் மாநில மற்றும் தேசிய, சர்வதேச அளவில் பிரதிநிதித்துவப்படுத்தும் தகுதியுடன் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என இதற்கான தகுதி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும் .குறிப்பிட்ட விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படலாம்.

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக 100 ரூபாய் செலுத்த வேண்டும். பெண் எஸ்.சி மற்றும் எஸ்.டி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் தளர்வு வழங்கப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் வருடம் செப்டம்பர் 1 முதல் மார்ச் மாதம் 31 ஆம் தேதி 2022 ஆம் வருடம் வரை நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் அவர்களுடைய செயல்திறன் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்திய பிரதேசம் மற்றும் வெளிநாடுகளில் எங்கு வேண்டுமானாலும் இடம் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.