நியாயவிலை கடைகளில் இவர்களுக்கு மறுக்காமல் பொருட்கள் வழங்க வேண்டும்! அரசு பிறப்பித்த உத்தரவு!!

0
57

நியாயவிலை கடைகளில் இவர்களுக்கு மறுக்காமல் பொருட்கள் வழங்க வேண்டும்! அரசு பிறப்பித்த உத்தரவு!!

தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் பயோமெட்ரிக் முறை மூலம் ஸ்மார்ட் கார்டில் இடம் பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்கள் யாராவது ஒருவர் மட்டுமே பொருட்களை வாங்க முடியும் என்ற சூழல் இருந்தது. எனினும் பயோமெட்ரிக் முறையில் கைவிரல் ரேகை பதிவு செய்யப்படுவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

குறிப்பாக, வயதானவர்கள் ரேஷன் கடைகளுக்கு வரும்போது அவர்களது கைரேகைகள் சரியாக பதிவது இல்லை. இதன் காரணமாக அவர்கள் பொருட்களை வாங்க முடியாத சூழல் ஏற்படுகிறது. இந்த நிலையில், தமிழக அரசு முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-

நியாய விலைக்‌ கடைகள்‌ வாயிலாகக்‌ குடும்ப அட்டைதாரர்களுக்குப்‌ பொது விநியோகத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ பொருட்கள்‌ வழங்கும்போது கைவிரல்‌ ரேகை சரிபார்ப்பு முறை பின்பற்றப்படுகிறது. கடந்த பிப்ரவரி 22 முதல்‌ விரல்ரேகை சரிபார்க்கும்‌ நடைமுறையில்‌ இடையூறுகள்‌ நமது மாநிலத்தில்‌ மட்டுமன்றி இதர மாநிலங்களிலும்‌ நிகழ்ந்துள்ளன.

எனவே, இவை தொடர்புடைய நிறுவனங்களின்‌ உயர்‌ அலுவலர்களின்‌ கவனத்திற்கு உடனுக்குடன்‌ கொண்டு செல்லப்பட்டுச்‌ சரி செய்ய‌ போர்க்கால நடவடிக்கைகள்‌ எடுக்கப்பட்டு வருகின்றன. ஆகவே, தொழில்நுட்பத்‌ தடைகளால்‌ கைரேகை சரிபார்ப்பு முறை செயல்படுத்தப்பட இயலாத காலங்களில்‌ உடனடியாக கைரேகை சரிபார்ப்பின்றி இதர வழிமுறைகளில்‌ உரிய பதிவுகளை மேற்கொண்டு‌ பண்டங்கள்‌ விநியோகம்‌ செய்யப்பட வேண்டும்‌.

மேலும், பொது விநியோகத்திட்டத்தின்‌ கீழ்‌ தகுதியுள்ள அனைத்துக்‌ குடும்ப அட்டைதாரர்களுக்கும்‌ அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய அத்தியாவசியப்‌ பண்டங்கள்‌ தரமாக விநியோகம்‌ செய்யப்படுவதை உறுதிப்படுத்திட வேண்டுமெனவும்‌ நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளது.