நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மாற்றம்!
நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகள் மார்ச் 26ஆம் தேதி தொடங்கி மே 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த முறை ஐபிஎல் தொடரில் வழக்கமாக விளையாடும் அணிகளுடன் கூடுதலாக லக்னோ மற்றும் குஜராத் ஆகிய இரு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது.
அதனை தொடர்ந்து நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெற்று முடிந்தது. இந்த மெகா ஏலத்தில் மொத்தமாக 600 வீரர்கள் ஏலம் விடப்பட்ட நிலையில், அதில் 204 பேர் விற்கப்பட்டுள்ளனர்.
இந்த முறை ஐபிஎல் தொடரில் பத்து அணிகள் மோதவுள்ளதால் அந்த பத்து அணிகளும் இரண்டு குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ளன. மேலும். நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை அணி விளையாட உள்ளது. எனவே, சென்னையை எதிர்த்து மும்பை அணி விளையாடும் என அனைவரும் எதிபார்த்திருந்தனர். அனால் அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் விளையாடும் சென்னை அணியை கொல்கத்தா அணி எதிர்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் முதலில் மும்பை அணிதான் விளையாடுவதாக இருந்தது. ஆனால் முதல் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதன் காரணமாகவே மும்பை அணிக்கு ஹோம் அட்வாண்டேஜ் கொடுக்க கூடாது என கருதியதன் காரணமாகவே வேறு வழியின்றி கொல்கத்தா அணியை சென்னை அணியுடன் முதல் போட்டியில் விளையாட வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.