அரசின் இந்த அறிவிப்பால் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாட்டம்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. மூன்று 20 ஓவர் தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று இந்தியாவுடன் விளையாடி வருகிறது இலங்கை அணி. இதில் 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக இந்திய அணி கைபற்றியது.
இதையடுத்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. கடந்த 4-ந் தேதி மொகாலியில் தொடங்கிய முதலாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கிடையே நடைபெற உள்ள இரண்டாவது டெஸ்ட் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது.
இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் இந்திய அணி வென்றுதன் மூலம் இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில், முதலாவது டெஸ்டில் அடைந்த படுதோல்வியின் காரணமாக இந்த தொடரை கண்டிப்பாக வெல்லும் முனைப்புடன் களமிறங்க உள்ளது இலங்கை அணி.
பிற்பகல் இரண்டு மணிக்கு தொடங்கும் இந்த போட்டி பகல்-இரவு போட்டியாக நடைபெற உள்ளது. இந்த போட்டியை காண முன்பு 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்ட நிலையில், கிரிக்கெட் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று தற்போது 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க கர்நாடக மாநில அரசு நேற்று ஒப்புதல் வழங்கி உள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.