இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!!

0
136

இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!!

கடந்த சில நாட்களுக்கு முன்புவரை தென் தமிழகம் மற்றும் அதனை ஓட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவி வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகத்தில் சில மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்து வந்தது.

இந்நிலையில், தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய மூன்று நாட்களிலும் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என கூறப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல், பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக  வரும் செவ்வாய்கிழமையன்று தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

புதன்கிழமையன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Previous articleஅந்த ஒன்றில் மட்டும் எங்களுக்கு புரிதலே இல்லை! இன்னும் கற்றுகொண்டு தான் இருக்கிறோம்: – பும்ரா பேட்டி!!
Next articleஅமெரிக்க தூதரகம் மீது ஏவுகணை வீசி தாக்குதல்! இந்த திடீர் தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம்!!