அதிகரித்து வரும் கொரோனா! நிபுணர்கள் அளித்துள்ள பதில்!!

0
133

அதிகரித்து வரும் கொரோனா! நிபுணர்கள் அளித்துள்ள பதில்!!

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவலின் பாதிப்பு குறைந்துகொண்டு வருகிறது. இதனால் நாட்டில் பரவி வந்த கொரோனாவின் மூன்றாம் அலை முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில், தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

இதையடுத்து இந்தியாவில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடிதம் எழுதி இருந்தார். அதில், போதுமான பரிசோதனைகளை மேற்கொள்ளவும், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை கவனிக்கவும், சமூக நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்றுவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தென்கிழக்கு ஆசியா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் தற்போது வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றின் காரணமாக இந்தியாவிலும் இதன் பாதிப்பு இருக்கக்கூடுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக நிபுணர்கள் கூறுகையில்,

இந்தியாவில் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டதால், இனி வரும் நாட்களில் கொரோனாவின் தாக்கம் கடுமையான பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பில்லை. மேலும், இந்தியாவில் புதிய உருமாறிய கொரோனாவுக்கு வாய்ப்பு மிகவும் குறைவு என தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றின் புதிய அலை வந்தாலும் அதன் பாதிப்பு கடுமையாக இருக்காது. எனவே இதன் காரணமாக, எதிர்வரும் நாட்களில் இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கத்தால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவு. இருப்பினும் தொற்றின் பாதிப்பிலிருந்து முழுமையாக மீளும் வரை பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

Previous articleபுயல் உருவாகிறது! வானிலை மையம் எச்சரிக்கை!! மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்!!!
Next articleஉக்ரைனின் அண்டை நாட்டிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பயணம்! ரஷியா மீது போர் தொடுக்க திட்டமா?