மத்திய பல்கலைகழகங்களிலும் இனி பொது நுழைவுத்தேர்வு! யுஜிசி வெளியிட்ட அறிவிப்பு!!

0
88

மத்திய பல்கலைகழகங்களிலும் இனி பொது நுழைவுத்தேர்வு! யுஜிசி வெளியிட்ட அறிவிப்பு!!

நாடு முழுவதும் மொத்தம் 45 பல்கலைகழகங்கள் யுஜிசி-யின் நிதியுதவி உடன் நடந்து வருகிறது. இதில் மாணவர் சேர்க்கையை யுஜிசி எனப்படும் பல்கலைகழக மானிய குழு கவனித்து வருகிறது. இந்நிலையில், மத்திய பல்கலைகழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பாக யுஜிசி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி வரும் கல்வியாண்டு முதல் யுஜிசி-யின் நிதியுதவி பெரும் அனைத்து மத்திய பல்கலைகழகங்களிலும் இளங்கலை படிப்புகளில் சேர இனி பொது பல்கலைகழக நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் இந்த பொது பல்கலைகழக நுழைவுத் தேர்வை நடத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

குறிப்பாக இந்த மாணவர் சேர்க்கை முழுவதும் பொது பல்கலைகழக நுழைவுத்தேர்வை அடிப்படையாக வைத்தே நடத்தப்படும் எனவும், இதன் காரணமாக 12-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் மாணவர் சேர்க்கைக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொது பல்கலைகழக நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பம் வருகிற ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் இருந்து விநியோகிக்கப்பட உள்ளது எனவும், ஜூலை மாதத்தில் இந்த நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த தேர்வு 13 மொழிகளில் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மருத்துவ படிப்புக்கு நீட் எனப்படும் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு அதில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.