ரூ.12 லட்சம் கேட்டு போராட்டம்! போலீசாரையே தாக்கிய வட மாநில தொழிலார்கள்!

0
162
Pm-kisan Scholarship Farmer You! Here is the important announcement made by the government!
Pm-kisan Scholarship Farmer You! Here is the important announcement made by the government!

ரூ.12 லட்சம் கேட்டு போராட்டம்! போலீசாரையே தாக்கிய வட மாநில தொழிலார்கள்!

வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் பலர் நமது தமிழகத்தில் தொழில் ரீதியாக பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் மாநிலத்தில் கொடுக்கப்படும் ஊதியத்தை காட்டிலும் தமிழகத்தில் அதிகமாக தருவதால் பெரும்பாலானோர் இங்கு உள்ளனர். நமது தமிழகத்தில் பெரும்பாலான வேலைகளில் அவர்களே உள்ளனர். குறிப்பாக தொழிற்சாலை சார்ந்த இடங்களில் பெரும்பான்மையாக வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். பல இடங்களில் காண்ட்ராக்ட் மூலம் வேலை செய்பவர்களும் உண்டு.

அந்தவகையில் ஈரோடு மாவட்டத்தில் வடமாநில தொழிலாளிக்கு ஏற்பட்ட அவல நிலையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி என்ற பகுதிக்கு அருகில் உள்ளது நஞ்சை ஊத்துக்குளி. இந்த நஞ்சை ஊத்துக்குளி யில் தனியார் எண்ணெய் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் பெரும்பான்மையாக வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் வேலை செய்து வருகின்றனர். அவ்வாறு வட மாநிலத்தை சேர்ந்த ஒருவர் நேற்று இரவு தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டிருந்துள்ளார். அங்கு அந்த எண்ணங்களை எடுத்து செல்லும் லாரி வந்துள்ளது. இந்த வடமாநில தொழிலாளி பின்னாடி இருப்பது தெரியாமல் லாரியின் பின் சக்கரம் அவர் மீது ஏறியது.

அதனால் வடமாநில தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவ்வாறு அசம்பாவிதம் ஏற்பட்டதும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வாருங்கள் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனர். ஆனால் அங்கு வேலை செய்த சக வடமாநில தொழிலாளர்கள் உடலை எடுத்து செல்ல விடவில்லை. இது நிறுவனத்தின் அஜாக்கிரதையால் ஏற்பட்ட விபத்து. அதனால் பாதிப்படைந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஏதேனும் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கேட்டனர். அவர்கள் கேட்டவாறு அந்த நிறுவன உரிமையாளரும் உயிரிழந்த வட மாநில நபருக்கு ரூ.12 லட்சம் தருவதாக கூறினார்.

ஆனால் சக பணியாளர்கள் அதனை ஏற்கவில்லை. நீங்கள் வாயால் கூறினால் மட்டும் போதாது அதற்கு பதிலாக காசோலையாகவோ அல்லது முழு தொகையை இப்பொழுதே தர வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு இருக்கையில் போலீசார் உடலை மருத்துவமனைக்கு அனுப்ப முயற்சித்தனர். பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் பொழுதே போலீசார் செய்த இந்த செயலால் சக தொழிலாளர்கள் கோபமடைந்து கலவரத்தில் இறங்கினர்.

அந்த நிறுவனத்தில் உள்ள அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கி உள்ளனர். தடுக்க வந்த போலீசாரையும் அடித்துள்ளனர். இந்த கலவரத்தில் 7 போலீஸார் காயம் அடைந்து மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு கலவரம் நடக்கிறது என்று தகவலறிந்த மாவட்ட கண்காணிப்பாளர் 300க்கும் மேற்பட்ட காவலர்களை கலவரம் நடக்கும் இடத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

Previous articleபெண்ணிடம் கைவரிசையை  காட்டிய விசிக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட இருவர் கைது!
Next articleஅதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கைது! எதிர்க் கட்சியில் நடக்கும் அடுத்தடுத்து குளறுபடி!