குடும்ப பிரச்சனைகளை தீர்க்கும் பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில்!

0
177

அனைவருடைய இல்லத்திலும் பிரச்சனை என்பது ஒரு குடும்ப உறுப்பினர் போன்றது இது பலருக்கு புரிவதில்லை.இன்னமும் சொல்லப்போனால் பிரச்சனை இல்லாத வீடு வீடே இல்லையென்று சொல்லுமளவிற்கு அனைவரது இல்லத்திலும் பிரச்சனைகள் இருந்து கொண்டிருக்கின்றன.

ஆனாலும் இந்த பிரச்சனைகள் எல்லை மீறும் போது தான் அதனை தீர்க்க முடியாமல் பலர் தவித்து வருகிறார்கள், ஆனாலும் இந்த பிரச்சினைகள் யாவும் அவரவர் கொண்டுள்ள எண்ணங்களைக் கொண்டு தான் உள்ளது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

அவரவர் எண்ணங்கள் சரியாக இருந்தால் எந்த ஒரு வீட்டிலும் பிரச்சினை என்பதற்கு இடமேயில்லாமல் போய்விடும். ஆனால் மனிதர்களின் மனம் கட்டுப்பாடற்று இருப்பதால் அனைவரது இல்லத்திலும் பிரச்சினைகள் தலைதூக்கி வருகின்றன. அந்த பிரச்சனைகள் காரணமாக, மனிதர்கள் நிம்மதியின்றி தவித்து வருகிறார்கள்.

அந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு என்ன வழி என்று பலரும் யோசித்து யோசித்து பித்துப் பிடித்தாற்போல திரிந்து வருகிறார்கள். தீர்க்க முடியாத பல பிரச்சினைகளை கடவுளிடம் ஒப்படைப்பது தான் மனித இயல்பு.

அந்த வகையில், குடும்பத்திலிருக்கும் பல பிரச்சனைகள் நீங்குவதற்கு ஆன்மீகம் சிறந்த தீர்வாக காணப்படுகிறது.ஆகவே குடும்பத்திலிருக்கும் இப்பிரச்சனைகள் அனைத்தும் நீங்குவதற்கு வழிபடவேண்டிய கோவிலைப் பற்றி அப்போது காணலாம்.

அதாவது சிவபெருமானின் தத்புருஷ முகத்திற்கு உரிய தலம் இது சென்னையிலிருந்து சுமார் 95 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கிறது சுருடப்பள்ளி இந்த தல மூலவரின் திருநாமம் பள்ளி கொண்டீஸ்வரர்.

அதேபோல அம்பாளின் பெயர் மரகத வள்ளி பாற்கடலை கடைந்த சமயத்தில் முதலில் வெளிவந்தது கொடூரமான விஷம் தான், அது உலகை அழிக்கும் அதற்கு முன்பாக அதனை தானுண்டு உலக உயிர்களை காக்க வேண்டும் என நினைத்தார் சிவபெருமான்.

, வீரியமுள்ள விஷத்தின் காரணமாக சிவபெருமானுக்கு சற்றே மயக்கம் ஏற்பட்டதாகவும், இதனால் அவர் அம்பாளின் மடியில் தலை சாய்ந்து படுத்திருந்ததாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறு சிவபெருமான் அம்பாளின் மடியில் தலைசாய்த்து படுத்திருக்கும் சயன கோலத்திலேயே இறைவன் இங்கே காட்சி தருகிறார். இவரை வழிபாடு செய்தால் குடும்ப பிரச்சினைகள் முடிவுக்கு வரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

மிக, மிக, அரிதான காட்சியாகப் பள்ளி கொண்டுள்ள சுருட்டப்பள்ளி இறைவனை தேடி வந்து வணங்கினால் அனைத்து விதமான தோஷமும் நீங்கும் என்பது ஐதீகமாக இருக்கிறது. இங்கு மட்டுமே சிவபெருமான் பள்ளி கொண்ட கோலத்தை பக்தர்களால் காண முடியும் என்கிறார்கள்.

Previous articleநீங்கள் இந்த ராசியா? இன்று ஒரே குஷிதான் போங்க!
Next articleஅண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! படித்த இளைஞர்களே தயாராய் இருங்கள்!