பிரபல ராப் பாடகர் திடீர் உயிரிழப்பு! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Photo of author

By Rupa

பிரபல ராப் பாடகர் திடீர் உயிரிழப்பு! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இந்த கொரோனா காலகட்டத்தில் அனைத்து நாடுகளும் பெருமளவில் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது. அந்தவகையில் இலங்கை பொருளாதார வீழ்ச்சியால் கடும் நெருக்கடியை தற்பொழுது சந்தித்து வருகிறது. மக்களின் அன்றாடத் தேவையான அரிசி பெட்ரோல் போன்ற அனைத்தும் அதிக அளவு விலை உயர்வை கொண்டுள்ளதாக காணப்படுகிறது.

இதனால் மக்கள் தினந்தோறும் தாங்கள் உண்ணும் உணவிற்கு சிரமப்பட்டு தவித்து வருகின்றனர். இவ்வாறு பொருட்களின் விலை உயர்வால் மக்கள் வீதியில் இறங்கி போராட தொடங்கிவிட்டனர். இலங்கையின் அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோர்தான் இந்நிலைக்கு காரணம் எனக்கூறி அவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் எனப் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கை அன்னிய நாட்டு செலவாணி இல்லாமல் பெருமளவு தவித்து வருகிறது.

இவ்வாறு பல நெருக்கடிகளை இலங்கை சந்தித்து வருவதால் இதர நாடுகளிடம் இருந்து வாங்கிய கடனை இந்த சூழலில் கட்ட இயலாது என கூறியுள்ளது. வாங்கிய கடனின் வட்டியை கூட கட்ட முடியவில்லை என்றால் நாடு திவாலாகும் நிலைக்கு தள்ளப்படும். இதனால் தினந்தோறும் தொடர் போராட்டங்கள் ஆகவே இலங்கையில் காணப்படுகிறது. இவ்வாறு இருக்கையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக கோரி தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்ட காலத்தில் ராப் பாடகர் ஷிராஸ் என்பவர் கலந்து கொண்டார்.

அவர் பாப் மார்லியின் கெட்டப் ஸ்டாண்டாஃப் பாடலை பாடி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை உற்சாகப் படுத்திக் கொண்டிருந்தார். அவ்வாறு பாடலை பாடியவர் ஏன் திடீரென்று கூட்டத்தில் மயங்கி விழுந்தார். பிறகு அங்குள்ளவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். மயங்கி விழுவதற்கு முன் அவர் பாடிய பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிக அளவு வைரலாகி வருகிறது. தனது இறுதி மூச்சு இருக்கும் வரை பாடல் வழியாக தனது போராட்டத்தை நடத்தியவர் என இவரைப் பற்றி சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.