இருளில் மூழ்க ரெடியா இருங்கள்! மாநிலங்களுக்கு எச்சரிக்கை! தொடரும் நிலக்கரி சர்ச்சை
தற்போது நிலவரப்படி நிலக்கரி தட்டுப்பாடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எந்த வகையில் என்றால் 6.7 கோடி டன் நிலக்கரி தேவையான இடத்தில் தற்போது 2.3 கோடி நிலக்கரி மட்டுமே உள்ளது. இதனால் மத்திய அரசால் மாநிலங்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத் கர்நாடகா ஆந்திரா என 12 மாநிலங்களில் மின்தடை அபாயம் ஏற்படும் என எச்சரித்துள்ளனர். நாட்டின் மின் தேவையை 50% அனல் மின் நிலையங்களை பூர்த்தி செய்கின்றனர். தற்பொழுது நிலக்கரி இல்லாததால் சற்று தடுமாற்றம் அடைந்துள்ளனர்.
சில குறிப்பிட்ட அனல் மின் நிலையங்களுக்கு மத்திய அரசு நிலக்கரியை குறைத்து அனுப்புகிறது. கோல் இந்தியா நிறுவனம் தேவைக்கேற்ப நிலக்கரி களை அதிகரித்தாலும் அதனை அனுப்புவதில் தொடர்ந்து தாமதம் செய்து வருகின்றனர். மின்வெட்டு ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று. இவ்வாறு நிலக்கரி கையிருப்பு குறைந்து கொண்டே போனால் வரும் நாட்களில் நாட்டின் பல மாநிலங்கள் இருளாக மாறிவிடும். தற்போது இது குறித்த ட்விட்டர் பதிவு வைரலாக பரவி வருகிறது.