கோயமுத்தூர் புளியக்குளம் அருகே இருக்கின்ற அம்மன் குளம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் கருப்புசாமி என்பவர் வசித்து வந்தார்.
இவருக்கு வசந்தா என்ற மனைவியும், சுரேஷ் என்ற மகனும், வனிதா என்ற மகளும் இருக்கிறார்கள். இதில் சுரேஷ் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், கருப்புசாமிக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் அதே பகுதியை சேர்ந்த விமலா என்ற பெண்ணுடன் பழக்கம் உண்டானது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிப்போனது.
இதனை தொடர்ந்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்திருக்கிறார்கள்.
அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வுபெற்ற கருப்பசாமிக்கு கிடைத்த ஓய்வூதிய பணத்தை தன் குடும்பத்தாரிடம் கொடுக்காமல் கள்ளக்காதலி கமலாவிடம் கொடுத்திருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, குடும்பத்தில் அவ்வப்போது பிரச்சினைகள் ஏற்பட்டு வந்திருக்கிறது.
இப்படியான நிலையில், 2நாட்களுக்கு முன்னர் நள்ளிரவில் புளியகுளம் பகுதிக்கு வந்த கருப்புசாமியின் மகன் சுரேஷ் தந்தையின் கள்ளக்காதலி விமலாவின் வீட்டருகே இருந்த தன்னுடைய தந்தையிடம் பணம் கேட்டிருக்கிறார். இதற்கு அவர் கொடுக்க மறுத்திருக்கிறார்.
அந்த சமயத்தில் இருவருக்குமிடையே திடீரென்று தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக, ஆத்திரமடைந்த சுரேஷ் தன்னுடைய தந்தை கருப்பசாமியை கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார். அதன்பிறகு அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகிவிட்டார் சுரேஷ்.
இதனை கண்ட அந்த தொகுதியை சார்ந்தவர்கள் பெரும் அதிர்ச்சிக்காளானார்கள். ஆகவே அவர்கள் வழங்கிய தகவலினடிப்படையில், அங்கு வந்த ராமநாதபுரம் காவல் துறையைச் சார்ந்தவர்கள் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சுரேஷை தற்போது கைது செய்திருக்கிறார்கள்.
அதன்பிறகு விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர் செய்து பின்னர் சிறையிலடைத்திருக்கிறார்கள்.